women Hormone balance foods 
ஆரோக்கியம்

பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் 7 உணவுகள்!

ம.வசந்தி

பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டங்களில் அவர்களின் ஹார்மோன் அளவுகள் அதிகரித்தும் குறைந்தும் காணப்படுவதால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமான வாழ்விற்கு உடலில் ஹார்மோன்கள் சம நிலையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பெண்களின் உடலில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்  7 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. ஆளி விதைகள்: ஆளி விதைகளில் ஹார்மோன்களின் அளவை சீராக்கும் வைட்டமின்கள், கனிமங்கள் நிறைந்துள்ளதோடு இதில் உள்ள லிக்னன்ஸ் (Lignans) மற்றும் இரசாயன கலவைகள் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களாக செயல்பட்டு புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதால் ஆளி விதைகளை ஸ்மூதீஸ், சாலடுகள் செய்தும் வறுத்தும் சாப்பிட்டு ஆரோக்கியத்தை பெறலாம்.

2. உலர் பழங்கள்: உலர் பழங்களில் (பாதாம், வால்நட், பேரிச்சம்பழம், ஆப்ரிகாட்) நார்ச்சத்து, புரதம், மக்னீசியம் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால்  ஹார்மோன்களை சீராக்க அதிக அளவில் உலர் பழங்களை சாப்பிட வேண்டும்.

3. பூண்டு: பெண்கள் உடலில் ஹார்மோன்களைச் சமநிலையில் வைத்திருக்க, காலையில் வெறும் வயிற்றில் பூண்டுகளை மென்று சாப்பிடலாம். மேலும், கார சுவை கொண்ட பூண்டை உணவில் தினந்தோறும் சேர்த்துக்கொள்ள ஹார்மோன் சமநிலைப்படுகிறது.

4. பீச்: பெண்களின் ஹார்மோன் அளவு குறைவாக இருக்கும்போது பீச் பழத்தை சாப்பிடுவதால் அதில் உள்ள பல வகையான வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் லிக்னென்ஸ் பைட்டோ ஈஸ்ட்ரோஜனாக செயல்பட்டு புற்றுநோய் வாய்ப்பையும் குறைத்து ஹார்மோன் அளவையும் அதிகரிக்கின்றன.

5. நாவல் பழம்: நாவல் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கி உள்ளதால் பெண்கள் தங்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க நாவல் பழங்களை சாப்பிடலாம். மேலும் ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளையும் உட்கொள்ளலாம்.

6. டோஃபு (சோயா பாலில் செய்யப்பட்ட பனீர்): டோஃபு புரதத்தின் சிறந்த மூலமாக இருப்பதால் பெண்கள் உடலில் ஹார்மோன் அளவு சமநிலையில் இருந்தாலும் எடுத்துக்கொள்ள உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பேணி பாதுகாக்கிறது.

7. சோயாபீன்: சோயாபீனில் புரதம் உட்பட பல வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளதால், உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால், சோயாபீனை சாப்பிட, தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடைந்து உடலுக்கு வலிமையும் ஆற்றலும் கிடைக்கச் செய்து ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துகிறது.

மேற்கண்ட ஏழு உணவு பொருட்களும் பெண்களின் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துவதில் சரியாகப் பணியாற்றுகின்றன.

Heart Attack Vs. Cardiac Arrest: இரண்டிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

SCROLL FOR NEXT