ப்ளூபெர்ரி பழத்தில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, ஈ, பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. உலர்ந்த ப்ளூ பெர்ரிக்கள் தற்போது டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் கிடைக்கின்றன. அவற்றில் உள்ள நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ப்ளூபெர்ரியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ இரண்டும் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தமாக்குகின்றன.
2. உடலை ஃப்ரீ ரேடிக்கல்கள், நிலையற்ற மூலக்கூறுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கின்றன. அவை செல்களை சேதப்படுத்தும் பண்பிலிருந்து பாதுகாக்கின்றன.
3. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) ஆக்சிஜனேற்றத்தை கணிசமாகக் குறைத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.
4. பெண்களின் சிறுநீர்ப்பாதையில் தங்கியிருக்கும் ஈ கோலி என்ற பாக்டீரியாவை முழுமையாக அழிக்கும் சத்து ப்ளூபெர்ரி பழத்திற்கு இருக்கிறது. சிறுநீர்ப்பை அழற்சி உள்ளவர்கள் ப்ளூபெர்ரி பழத்தினை சாறெடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர அலர்ஜி குணமாகும்.
5. இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. இது உயர் ஃபிளாவனாய்டுடன் சேர்ந்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மேலும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகவும் உள்ளது.
6. இரைப்பை, குடல் நிலைகள் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஆகிய இரண்டிற்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று பாரம்பரிய மருத்துவம் கூறுகிறது.
7. ப்ளூபெர்ரி பார்வையை மேம்படுத்துவதோடு கண்களுக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. கண்புரை மற்றும் மாகுலர் சிதைவுக்கான வாய்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது.