Do you know 7 amazing benefits of spinach seeds? https://www.netmeds.com
ஆரோக்கியம்

தண்டுக்கீரை விதை(அமராந்த்)களின் 7 அற்புத நன்மைகள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

மராந்த் ஒரு தானியத்தைப் போன்றே அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருந்தாலும், இது உண்மையில் தண்டுக்கீரையின் விதை. 100 கிராம் அமராந்த் விதைகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், செலினியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் வைட்டமின் பி6, பி9, பி2, பி3, வைட்டமின் ஈ மற்றும் தயாமின் ஆகியவை உள்ளன.

அமராந்த்தின் 7 நன்மைகள்:

1. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து எல்டிஎல் கொழுப்பை கணிசமாகக் குறைக்கிறது.

2. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இதில் உள்ள மாங்கனிசு நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது.

3. அமராந்த் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கிறது. முன்கூட்டியே வயதாவதைத் தடுக்கிறது.

4. அமராந்த் விதைகளில் செய்யப்படும் புட்டு போன்ற உணவுகளை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. எனவே, தேவையில்லாமல் வேறு உணவுகளை உண்ணத் தோன்றாது. இதனால் உடல் பருமன் குறைகிறது.

5. எலும்பு ஆரோக்கியத்திற்கு இது சிறந்தது. இதில் உள்ள கால்சியம் மனிதனின் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது. அமராந்தை கஞ்சி செய்து காலை உணவில் பாலுடன் சேர்த்துப் பருகலாம்.

6. அமராந்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. இது சருமம் மற்றும் கூந்தலுக்கு சரியான உணவாக அமைகிறது. அமராந்தில் குறிப்பாக முடி வளர்ச்சிக்கு தேவையான லைசின் உள்ளது.

7. இதில் பசையம் இல்லை. ஆனால், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். எனவே, விரதத்தின்போது சோர்வடையாமல் இருப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது.

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

SCROLL FOR NEXT