Do you know why blood vessel blockage occurs? https://www.modernheartandvascular.com
ஆரோக்கியம்

இரத்தக் குழாய் அடைப்பு ஏன் வருகிறது தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும் அதனால் உண்டாகும் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு பற்றியும் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏன் வருகிறது? அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள தேவைக்கு அதிகமான கொழுப்புகளானது இரத்தத்தில் கலந்து, பின் அவை பிளேக்குகளாக மாறி இரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் தங்கிவிடுகின்றன. பின் இவை சமநிலையான இரத்த ஓட்டத்திற்கு பாதிப்பை உண்டுபண்ணி உயர் இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கின்றன. தலைச் சுற்றல், மயக்கம், படபடப்பு போன்றவை இவ்வாறான அடைப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.

இனி, இரத்தக் குழாய் அடைப்பு வராமல் தடுக்க உண்ண வேண்டிய ஐந்து வகை உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

குறைந்த அளவு கலோரிகள் கொண்ட, அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்துக்களை உள்ளடக்கியதுமான ப்ளூ பெர்ரி உண்பதால் இதயம் ஆரோக்கியம் பெற்று இரத்தத்தை பம்ப் பண்ணி வெளியேற்றும் வேலையை சிறப்பாக செய்ய முடிகிறது.

புரோக்கோலியில் நார்ச்சத்து, கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன. இவை இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து இதய ஆரோக்கியத்தைக் காக்கவல்லது.

மீன் உணவுகளில் அடங்கியிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் அடைப்பு உண்டாவதைத் தடுத்து இதய ஆரோக்கியத்தைக் காக்க உதவுகின்றன.

ராஸ் பெர்ரியில் இதய ஆரோக்கியம் காக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடியதுமான பொட்டாசியம் சத்து அதிகளவில் நிறைந்துள்ளது.

தக்காளிப் பழத்திலுள்ள லைகோபீன் என்ற பொருள் வீக்கத்தைக் குறைக்கும்; நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும்; இதய நோய்கள் வரும் ஆபத்தைத் தடுக்கவும் செய்யும்.

இவ்வகையான உணவுகளை அடிக்கடி தினசரி உட்கொண்டு இதய ஆரோக்கியம் காப்போம்.

அலை அலை அலை அலையலை... 'துறைமுக அலை' என்பது என்ன?

தலைமுறை செல்வத்தை உருவாக்குவதற்கான 7 முக்கிய வழிமுறைகள்!

விண்வெளியில் புதிய மூலக்கூறைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! 

செவ்வாழைப் பணியாரம்: ருசியும் ஆரோக்கியமும் நிறைந்த சூப்பர் ரெசிபி! 

கனவில் இத்தனை வகையான கோட்பாடுகள் உள்ளனவா? வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்!

SCROLL FOR NEXT