நம் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் பலவித காரணங்களால் அழுத்தம் வந்து அமர்ந்து கொள்வது இயற்கை. இந்த அழுத்தமானது உடலில் பல்வேறு உடல் நலக் கோளாறுகளை உண்டுபண்ணவும் காரணமாகிறது. அவற்றில் ஒன்று முடி உதிர்வது ஆகும். ஸ்ட்ரெஸ்ஸின் அளவைக் குறைத்து முடி கொட்டாமல் பாதுகாக்க ஐந்து விஷயங்களை இந்தப் பதிவில் காணலாம்.
* மெடிடேஷன் பண்ணுவது ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெற்று ஸ்ட்ரெஸ் குறையவும் செய்கிறது. அதிலும் மன நிறைவோடு மெடிடேஷன் பண்ணும் போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் சுரப்பு கட்டுப்படுத்தப்படுகிறது; இதனால் முடி உதிர்வதும் தடுக்கப்படுகிறது.
* யோகா செய்வதால் தலைப் பகுதிக்கு செல்லும் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. மூளையில் சுரக்கும் 'ஃபீல் குட்' ஹர்மோன்களின் சுரப்பு அதிகப்படுத்தப்படுகிறது; இதனாலும் முடி கொட்டுதல் தவிர்க்கப்படுகிறது.
* முடியை ஆரோக்கியமாகப் பராமரிக்கத் தேவையான புரோட்டீன், வைட்டமின்கள், மினரல்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சத்தான சரிவிகித உணவுகளை உண்பது மிக அவசியம். இதனால் ஸ்ட்ரெஸ் குறைகிறது. கூடவே முடி உதிர்வதும் குறைகிறது.
*ஒவ்வொரு நாளும் உடலுக்குத் தேவையான அளவு தூக்கம் பெறுவதும் மன அழுத்தம் குறையச் செய்ய சிறந்த வழியாகும். சுகாதாரமான சூழலை உருவாக்கி, குறிப்பிட்ட நேரம் தவறாமல், படுக்கைக்குச் செல்வது, ஸ்ட்ரெஸ்ஸினால் உண்டாகும் முடி உதிர்வைத் தடுக்கும்.
* உச்சந்தலைப் பகுதியில் நன்கு மசாஜ் செய்வதும் ஸ்ட்ரெஸின் அளவைக் குறைக்கும். இதனால் தலைப் பகுதிக்கு இரத்த ஓட்டம் சீராகச் செல்ல உதவும். இப்படிச் செய்வது முடி இழப்பையும் தடுக்கும்.
மேற்கண்ட ஐந்து விஷயங்களைப் பின்பற்றி நாமும் ஆரோக்கியம் நிறைந்த கூந்தலைப் பெறுவோம்; மன அழுத்தம் இன்றி வாழ்வோம்.