Health Nutrients in Sprouted Lentils https://www.indianhealthyrecipes.com
ஆரோக்கியம்

முளைகட்டிய பயறுகளில் இருக்கு அம்புட்டு சத்து!

இரவிசிவன்

ன்றாடம் நமது உணவில் காய்கறிகள், பழங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை முளை கட்டிய பயறுகளுக்கும் (தானியங்களுக்கு) தருவது தற்காலத்தில் மிக மிக அவசியமானது. முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காராமணி, கொள்ளு, தட்டைப்பயறு, உளுத்தம்பயறு, சோயா பயறு போன்ற அனைத்து பயறுகளிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன.

பயறு வகைகளும் பயன்களும்:

முளைகட்டிய பாசிப்பயறு: இது எலும்பு வளர்ச்சிக்கும், சீரான இரத்த ஓட்டத்துக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற உணவாகும். பெருங்குடல் தொந்தரவுகளைத் தீர்த்து, மலச்சிக்கலைப் போக்குகிறது. இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் அன்றாட இதை உணவோடு எடுத்துக்கொள்ளலாம்.

முளைகட்டிய கொண்டைக்கடலை: உடலை வலிமையாக்குகிறது. இது மாரடைப்பு காரணிகளைத் தவிர்க்கிறது. நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து இதை எடுத்துக்கொள்வதால் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

முளைகட்டிய தட்டை பயறு: இது உடலுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கிறது. நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், புரதமும் இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது.

முளைகட்டிய சோயா பயறு: இதை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. ஹார்மோன் பிரச்னைகளுக்கு உள்ளான பெண்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதில் புற்றுநோயை வராமல் தடுக்கும் மூலக்கூறுகள் உள்ளன.

முளைகட்டிய உளுந்து: வேகவைத்து சாப்பிடும்போது உடல் சோர்வு நீங்கி, உற்சாகம் தரும் உணவாக இது இருக்கிறது. குறிப்பாக, நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் சோர்வு நீங்கி, உடல் வலுப்பெறுவதற்கு உதவுகிறது. இது எலும்பு, தசை, நரம்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. மன அழுத்தத்தைப் போக்கி தூக்கமின்மை பிரச்னையைத் தீர்க்கிறது.

பொதுவான நன்மைகள்:

* முளைகட்டிய பயறுகளை அப்படியே பச்சையாக சாப்பிடுவதென்றால் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. ஏனெனில், இது செரிமானம் அடைவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும்.

* சில நேரங்களில் வயிறு உபாதைகள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் முளைகட்டிய தானியங்களை லேசாக வேகவைத்து சாப்பிட்டால் ஒருவர் 50 கிராம் அளவு வரை சாப்பிடலாம்.

* குறிப்பாக. முளைகட்டிய பயறு வகைகளை சாப்பிட காலை நேரம் உகந்தது.

* இவற்றில் புரதம் மட்டுமல்லாது. நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பீட்டா கரோட்டின், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற பல வகையான சத்துக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

* இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் கட்டாயம் முளைகட்டிய தானிய வகை ஏதாவது ஒன்றினை தினமும் எடுத்துக்கொள்வது நன்மை தரும்.

* வளரும் குழந்தைகளுக்கு முளைகட்டிய பயறுகளை நன்றாக வேகவைத்து தினமும் 50 கிராம் வரை காலை உணவோடும், மதிய உணவோடும் தருவதால், உடல் உறுதி, உடல் சுறுசுறுப்பு, மனத்தெளிவு, புத்திக் கூர்மை, ஞாபக சக்தி அதிகரிப்பு ஆகிய பல்வேறு நன்மைகளை குழந்தைகள் பெறுவார்கள்.

* பெண்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முளைகட்டிய பயறுகள் மிக எளிமையான தேர்வாகும். முக்கியமாக, கூந்தல் வளர்ச்சி, சருமத்துக்கு மினுமினுப்பு தருவதோடு கொலஸ்ட்டிராலை சமன்படுத்தும் வேலையையும் முளைகட்டிய பயறுகள் திறம்பட செய்கின்றன.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT