குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆல் டைம் பேவரிட்டாக இருப்பது உருளைக்கிழங்கு ஃப்ரைபிங்கர் சிப்ஸ் மற்றும் ஃப்ரெஞ்ச் ஃப்ரை ஆகும். உருளைக்கிழங்கு சரும அழகு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொடுக்கும் என்பதை அறிவோமா? உடலுக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் தரும் உருளைக்கிழங்கு பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உருளையில் உள்ள பாலிஃபீனால் சூரிய கதிர்களால் ஏற்படும் கருமையை நீக்கி களைப்படைந்த சருமத்தை பொலிவாக்கும். இந்தக் கிழங்கு சாற்றில் துத்தநாகம் இருப்பதால் அது சருமத்தில் உள்ள வடு மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். மேலும், இதில் உள்ள இரும்புச்சத்து சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், பளபளப்பிற்கும் பெரிதும் உதவுகிறது.
உருளை அசிலைக் ஆசிட் தன்மை கொண்டது. இதனால் இயற்கையாகவே சருமம் பளிச்சிட உதவுகிறது. அசிலைக் மற்றும் சைடோனகன் இரண்டும் முகப்பருவினால் ஏற்படும் பாதிப்பை குறைத்து வடுக்களைப் போக்குகிறது. உருளையின் அதிக அளவு லைசின் போன்ற புரதச்சத்து இருப்பதால் இது சருமம், முடி, விரல் மற்றும் நகங்களை பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க உதவும்.
உருளையில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் தோன்றும் சுருக்கத்தை நீக்கி இளமையாக இருக்க உதவும். பொட்டாசியம் இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதிலுள்ள ஹயலுரானிக் அமிலம் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கும். உருளை தோலில் உள்ள ரைபோபிளேபின், அஸ்கார்பிக் அமிலம், போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் கண், சருமம் மற்றும் நரம்பு மண்டலத்துக்கு சிறந்தது.
உருளை பவுடர், ஓட்ஸ் ஒரு டீஸ்பூன் மற்றும் தயிர் கலந்து தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் கண் கருவளையம் மறையத் தொடங்கும். மேலும், உருளை பவுடர், இரண்டு டீஸ்பூன் பாலுடன் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ சருமம் பளிச்சென்று இருக்கும்.
உருளை பவுடர் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டது. உருளை பவுடர் மூன்று டீஸ்பூன் எடுத்து அதை பன்னீர் சேர்த்து நீர்க்கக் கரைத்து அதில் டிஷ்யூ பேப்பரை நனைத்து முகத்தினை மூடி பின் 15நிமிடம் கழித்து எடுத்து விட சருமம் பளிச்சென்று இருக்கும்.
இப்படி பல்வேறு நன்மைகளை கொண்ட உருளைக்கிழங்கை ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தி பலன் பெறலாம்.