நரிகள் பற்றிய சில தகவல்கள்!

வாசுதேவன்

நரிகள் நாய்கள் இனத்தைச் சார்ந்தவை. எல்லா கண்டங்களிலும் நரிகளின் நடமாட்டம் உண்டு.

Fox | Imge credit: pinterest

காடுகளில் இவை சராசரியாக மூன்று ஆண்டுகள் உயிர் வாழும். சரிவர வளர்க்கப்பட்டால் கூடுதல் ஆண்டுகள் இருக்கின்றன.

Fox | Imge credit: pinterest

இவை பாலூட்டி, கூர்மையான முகம் மற்றும் காதுகள், ரோமங்களால் மூடப்பட்ட சற்று நீளமான வால்கள் சிவப்பு, பழுப்பு நிறம் கொண்டவை.

Fox | Imge credit: pinterest

இவை ஒரு ஆண், ஒரு பெண் ஜோடியாக கடைசி வரையில் உயிர் வாழும்.

Fox | Imge credit: pinterest

பெண் நரியின் கர்ப்ப காலம் 60 - 65 நாட்கள். ஒரே சமயத்தில் நான்கு குட்டிகள் வரை ஈனும்.

Fox | Imge credit: pinterest

இவைகள் எந்த வகை உணவையும், இறந்து போனவைகள் உட்பட உண்ணும். தேவை என்றால் சுயமாக வேட்டை ஆடக்கூடிய திறமையும் கொண்டது.

Fox | Imge credit: pinterest

இவை வசிப்பிடங்கள் ஆழமான பள்ளங்கள். கூறிய நகங்களால் ஆழமான பள்ளங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவை.

Fox | Imge credit: pinterest

பொதுவாக நரிகள் தந்திரம் மிகுந்த விலங்காக கருதப் படுகின்றன.

Fox | Imge credit: pinterest

ஆபத்து ஏற்பட்டால் பல முறைகளில் சுலபமாக தப்பிக்கும். பின்னால் சென்றே தப்பிக்கவும் தெரியும் இறந்த மாதிரி போஸ் கொடுத்தும் எஸ்கேப் ஆகிவிடும்.

Fox | Imge credit: pinterest

குட்டிகள் குகை மாதிரியான பள்ளங்களில் தாய் பராமரிப்பில் பாதுகாக்கப்படும். சில நேரங்களில் தந்தை நரியும் பாதுகாக்கும்.

Fox | Imge credit: pinterest

நரிகள் வித்தியாசமான குரலில் ஊளையிட்டு தொலை தூரத்தில் உள்ள நரிகளுக்கு செய்திகளை அனுப்பும் திறன் கொண்டவை.

Fox | Imge credit: pinterest

நரிகளுக்கு கண் பார்வை மிகவும் அதிகம். அதேபோல் துல்லியமாக கேட்கும் செவி திறனும் கொண்டது.

Fox | Imge credit: pinterest

ஓநாய்களை விட நரிகள் சிறிதாக காணப்படும். நரிகளில் சிறிய உருவம் கொண்டவை குள்ள நரிகள் என்று அழைக்கப் படுகின்றன.

Fox | Imge credit: pinterest

சில இடங்களில் பண்ணைகளில் நரிகளை வளர்ப்பவர்களும் உண்டு.

Fox | Imge credit: pinterest
Malala Yousafzai | Imge credit: pinterest
Malala Yousafzai Quotes: மலாலாவின் 15 'புரட்சிகர' மொழிகள்!