சுருக்குப்பை செய்திகள் 02.04.2024

கல்கி டெஸ்க்

உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாக்கு சேகரிப்பு. வரும் 19ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரம்.

PM Modi

தமிழகத்தின் நலன்களை பாதுகாக்க திமுக எதுவுமே செய்ததில்லை என பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம். கச்சா தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் முற்றிலும் அம்பலமாகி இருப்பதாக வலைப்பதிவு.

PM Modi

மீன் பிடி உரிமையை காங்கிரஸ் அரசு விட்டுகுடுத்ததால் கடந்த 20 ஆண்டுகளில் 6184 தமிழக மீனவர்களை இலங்கை சிறைப்பிடித்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம். மத்திய அரசு தான் ஒவ்வொரு முறையும் நடவடிக்கை எடுத்து விடுவிப்பதாக பேட்டி.

Jai Shanakr

தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை பாஜக அரங்கேற்றுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

MK Stalin

தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகள் தவிர வேறு கட்சிகள் கால் பதிக்க கூடாது என அதிமுகவுடன் திமுக கைகோர்த்து உள்ளதாக கூறப்படுவதற்கு மு.க.ஸ்டாலின் மறுப்பு.

MK Stalin

தமிழ்நாடு முழுவதும் 83 மைங்களில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பொது தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் 6ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித் துறை தீவிரம்.

Education Department

ஐபிஎல் 14வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி. மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

RR

தமிழகத்தில் நடப்பு ஆண்டு கோடையில் அதிக வெப்ப அலை விசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. இயல்பை விட குறைவாக மழை பெய்ய கூடும் என்றும் கணிப்பு.

Summer Heat

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாப் சாஹு இன்று ஆலோசனை. வருமான வரி துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் விவாதிப்பு.

Sathya Pratha Sahoo

2000 ரூபாய் நோட்டுகளை 97.69% திரும்ப பெற்று உள்ளதாக RBI தகவல். 8202 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளதாக விளக்கம்.

2000 Note, RBI

மார்ச் மாதம் 1.78 லட்சம் கோடி GST வரி வசூல். தமிழகத்தில் இருந்து மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என தகவல்.

GST

ஒலிம்பிக் போட்டிக்கு 3வது முறையாக தகுதி பெறும் மீராபாய் சானு. பாரிஸ் ஒலிம்பிக்கில் பளுத்துக்கும் வீராங்கனை மீராபாய் சானு பங்கேற்பது உறுதி.

Mirabai Chanu

ஐபில் இன்றைய போட்டியில் பெங்களூரு லக்னோ அணிகள் மோதல். 2வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் முனைப்பு.

RCB Vs LSG

டென்னிஸ் தரவரிசை இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோக்கோவிட்ச் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 30 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டி சீன அத்துமீறல். பெயர்களை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என மத்திய வெளியூரகத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்.

Jai Shankar

ஜப்பானின் வடக்கு பிராந்தியத்தையொட்டிய பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். விக்டர் அளவு கோளில் 6.1 பதிவானதாகத் தகவல்.

Earth Quake

கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதையடுத்து, அவருக்குப் பதில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல். படப்பிடிப்பு தாமதமாவதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ஏற்கனவே துல்கர் சல்மான் விலக, அவருக்குப் பதில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

Thuglife Update
Surukkupai seithigal