சுருக்குப்பை செய்திகள் 03.04.2024

கல்கி டெஸ்க்

மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரல் 9ம் தேதியன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை, பாண்டிபஜாரில், ‘ரோட் ஷோ’ நடத்த இருப்பதாக பாஜக தகவல்.

PM modi

ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இவர் பேசுவார் எனத் தகவல்.

Amit Shah

வெள்ள நிவாரண தொகை கேட்டு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடுக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. ‘மாநிலங்கள் நிதி பெறவும், நீதி பெறவும் உச்ச நீதிமன்ற கதவை தட்டும் நிலை மாற வேண்டும்’ என்றும் அவர் வேலூர் கூட்டத்தில் பேசினார்.

CM Stalin, Supreme Court

ஐபிஎல் 15வது லீக் போட்டியில் லக்னோ அணி வெற்றி. 28 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

LSG

தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயர வாய்ப்பு. வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 106 டிகிரி ஃபர்ஹன்ஹீட்டாக வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல்.

Summer Heat

மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 33 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

Manmohan Singh | Image Credit: Wikipedia

வெளிநாட்டில் படித்த மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சியின்போது உதவி தொகை வழங்க வேண்டும். இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

Medical Students, Supreme Court

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை. இந்தியா-சீன இடையே எல்லை பிரச்னை நீடிக்கும் நிலையில், ஜோ பைடன், சீன அதிபர் தொலைபேசியில் ஆலோசனை.

Joe Biden , XI JINPING

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி, கொல்கத்தா அணிகள் மோதல். இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டின மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

KKR vs DC

பலாப்பழம் சின்னத்திற்கு பதிலாக இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓபிஎஸ். பழக்க தோஷத்தில் கேட்டதாகப் பேச்சு.

OPS | Image Credit: Wikipedia

ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக டெல்லியில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை. ‘அமீரை கைது செய்யும் எண்ணம் தற்போதைக்கு இல்லை’ என என்சிபி அதிகாரிகள் விளக்கம்.

Jaffer Sadiq, Ameer

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல். ‘மெகா ரோடு ஷோ’ நடத்த காங்கிரஸ் ஏற்பாடு.

Rahul Gandhi

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஐபில் போட்டிகளில் மாற்றம். கொல்கத்தாவில் வரும் 17ம் தேதியில் நடக்கவிருந்த போட்டி 16ம் தேதி மாற்றப்படுவதாக அறிவிப்பு.

Ramanavami, IPL Match

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள பான் இந்தியா படமாக உருவாகியுள்ள,  'இந்தியன் 2' படம் அடுத்த மாதம் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்.

Indian 2
Surukkupai seithigal