கே.எஸ்.கிருஷ்ணவேனி
சின்ன வெங்காயம் ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய கொழுப்பை கரைத்து இதயத்தை பாதுகாக்கும்.
அதிகமான அளவு யூரிக் அமிலம் சேருவதால் தான் நமக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. சின்ன வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்துக் கொள்ள யூரிக் அமிலத்தால் ஏற்படும் கற்கள் கரைந்து விடும்.
ஜலதோஷத்திற்கு இரண்டு சின்ன வெங்காயத்தை தோலுரித்து பச்சையாக மென்று கடித்து விழுங்கி அரை கப் சூடான நீர் பருக தும்மல், மூக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் போன்றவை குணமாகும்.
மூல நோய்க்கு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி மோர் கலந்து பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.
பல் வலி, ஈறு வலிக்கு சின்ன வெங்காயத்தை அரைத்து வலி உள்ள இடங்களில் அதன் சாறை தடவ குணம் தெரியும்.
பத்து சின்ன வெங்காயத்தை அரைத்து கடுகு எண்ணெயுடன் கலந்து வலியுள்ள மூட்டுகளில் தடவி வர வீக்கம் மற்றும் வலி குறையும்.
சின்ன வெங்காயம் ரத்த நாளங்களில் படியும் கொழுப்புகளை கரைத்து விடும் தன்மை கொண்டது.
சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியும் மூளைக்கு பலத்தையும் கொடுக்கக் கூடியது.
இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் படுக்கச் செல்லும் முன் சின்ன வெங்காயத்தை அரைத்து சிறிது மோர் அல்லது நீரில் கலந்து குடிக்க நன்கு உறக்கம் வரும்.
சின்ன வெங்காயம் ஆறு எடுத்து நன்கு அரைத்து தலையில் மயிர் கால்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலையை அலசி விட முடி கொட்டுவது நிற்பதுடன் பொடுகு பிரச்சனைக்கும் தீர்வாக அமையும்.