ஒரே நாளில் 192 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய பத்திர பதிவுத்துறை!

Deed
Deed

டிசம்பர் 14 சுப முகூர்த்த நாள் என்பதால் தமிழ்நாட்டில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்று, 192 கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் நம்பிக்கை அளிக்கும் துறைகளில் ஒன்றாக இருப்பது பத்திர பதிவுத்துறை. சொந்தமாக வீடு, மனைகள் வாங்க வேண்டும் என்ற மோகத்தின் காரணமாக சாமானியர்கள், மேல் தட்டு வர்க்கத்தினர் வரை அனைத்து தரப்பினரும் வருமானத்தில் பெருமளவை ஒதுக்கின்றனர். சொந்தமாக வீடு அல்லது மனை வாங்க வேண்டும் என்று பெரிய அளவிலான பொருளாதாரத்தை செலவு செய்கின்றனர். அதே சமயம் வீடுகள், மனைகள் வாங்குபவர்கள் அவற்றை சுப முகூர்த்த நாட்களில் வாங்க முனைப்பு காட்டுகின்றனர். இதனால் சுபமுகூர்த்த நாட்களில் அதிக அளவிலான பத்திரப்பதிவு நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இணையத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு இதுதான்!
Deed

இந்த நிலையில் வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கை, 2023 ஆண்டில் டிசம்பர் 14ஆம் தேதி அதிக அளவிலான பத்திரப்பதிவு நடைபெற்றிருக்கிறது. இந்த ஆண்டில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளாக இது உள்ளது. சுப முகூர்த்த நாட்கள் என்பதால் பலரும் இந்த நாட்களில் பத்திரப்பதிவு செய்து ஆவணங்களை பெற தீவிர முயற்சி எடுக்கின்றனர். இதனால் அதிக அளவிலான முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்பே வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் 22,060 பத்திர பதிவுகள் மூலம் தமிழ்நாடு அரசிற்கு வருவாயாக 192 கோடி கிடைத்திருக்கிறது.

டிசம்பர் 14 சுப முகூர்த்த நாள் என்பதால் பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் பெரும் அளவிலான கூட்டம் கூடியது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com