இணையத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு இதுதான்!

Biriyani Dish.
Biriyani Dish.
Published on

இந்தியாவில் அதிகம் பிரியாணி ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இணையதளம் வழியாக உணவுகளை ஆர்டர் செய்து பயன்படுத்தும் மக்களினுடைய எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் உணவு ஆர்டர் செய்த மக்களினுடைய மொத்த எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, அவர்களை ஒரே பகுதியாக கருதினால் அது உலகின் 17வது பெரிய நகரமாக இருக்கும். மேலும் பெரும்பான்மையான மக்கள் பிரியாணி உணவை அதிகம் ஆர்டர் செய்து வருவதாகவும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை, இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு வகையாக இருப்பது பிரியாணி. கடந்த எட்டு ஆண்டுகளாக பிரியாணி அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு வகையாக இருக்கிறது. ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன. 5.5 சிக்கன் பிரியாணி ஆர்டர் பெறப்படும் அதே நேரத்தில் ஒரு வெஜ் பிரியாணியும் ஆர்டர் செய்யப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி 4.30 லட்சம் பிரியாணிகள் இந்தியாவில் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. ஆர்டர் செய்யப்பட்டது 6 பிரியாணிகளில் 1 பிரியாணி ஹைதராபாத்தில் ஆர்டர் செய்யப்படுகிறது. ஹைதராபாத் மக்கள் அதிகம் பிரியாணியை ஆர்டர் செய்து பயன்படுத்துகின்றனர்.

நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நிமிடத்திற்கு 188 பீட்சா ஆர்டர் செய்யப்பட்டது. இவ்வாறு சென்னை, புதுடெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அதிகமான ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அதிகம் இணைய வழியாக உணவுகளை ஆர்டர் செய்யும் நகரமாக மும்பை இருக்கிறது. 42.3 லட்சம் ஆர்டர்கள் பெறப்படுகின்றன. துர்கா பூஜையின் போது 77 லட்சம் குலாப் ஜாமுனும், ரசகுல்லாவும் ஆர்டர் செய்யப்பட்டது. நவராத்திரி பூஜையின் போது அதிகம் மசால் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வெரைட்டி பிரியாணி ரெஸிபிஸ்!
Biriyani Dish.

இந்தியாவின் முக்கிய நகரமான பெங்களூர் அதிகம் கேக்குகளை ஆர்டர் செய்யும் நகரமாக இருக்கிறது. குறிப்பாக சாக்லேட் கேக் அதிகமாக ஆர்டர் செய்யப்படுகிறது. இவ்வாறு 85 லட்சம் சாக்லேட் கேக்குகள் மற்றும் கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன என்று ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com