2023ம் ஆண்டு இந்தியா பல்வேறு வகைகளில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் உயர்வைக் கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பங்குச்சந்தை வர்த்தகத்தில் நம்பிக்கை தரும் நாடுகளில் ஒன்றாக மாறியிருப்பதாக மாறி உள்ளது. இந்திய மக்களிடம் பங்குச் சந்தை தொடர்பான ஈடுபாடு அதிகரித்து இருப்பதாக உலக பங்குச் சந்தை முதலீட்டாளர் மையம் தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கல்வி அறிவு மற்றும் தடையற்ற இணைய சேவை, உள்நாட்டு உற்பத்தி உயர்வு ஆகியவை பங்குச்சந்தையை நோக்கி மக்கள் நகர காரணமாக மாறி இருக்கிறது. உலகில் பங்குச் சந்தை முதலீடுகளில் அதிக முதலீடுகளைக் கொண்ட டாப் 10 நாடுகளின் இந்தியா ஒன்றாக உருவெடுத்து இருக்கிறது. 2023ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி வரையிலான நிலவரப்படி இந்தியா நடப்பாண்டில் மட்டும் 22.4 சதவீத முதலீடுகளை கூடுதலாக பங்குச் சந்தையில் பதிவு செய்திருக்கிறது. மேலும், பங்குச்சந்தையில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. இவ்வாறு 8.49 கோடி இந்தியர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்து இருக்கின்றனர்.
இந்தியாவில் அதிக அளவிலான முதலீடு மற்றும் அதிக அளவிலான முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை கொண்டிருக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் 1.48 கோடி முதலீட்டாளர்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தில் 89.5 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் 76.5 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். பீகார் மாநில முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் உயர்வைக் கண்டிருக்கிறது. இவ்வாறு 36.6 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 33.8 சதவீத முதலீட்டாளர்கள் எண்ணிக்கையை உத்திரபிரதேசம் கூடுதலாகப் பெற்று இருக்கிறது.
பங்குச்சந்தை முதலீடுகளை எளிமைப்படுத்தியுள்ள பல்வேறு வகையான இணைய செயலிகள் மூலம் இந்தியா 4 டிரில்லியன் அளவிலான பங்குச் சந்தை முதலீடுகளை கூடுதலாகப் பெற்று இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி கடந்த மார்ச் மாதம் 16,828 ஆக இருந்து, தற்போது 21,500 ஆக உயர்வைக் கண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 72,200 புள்ளிகள் வரை விற்பனையாகி முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.