ஜிஎஸ்டி செலுத்தாத Zomato நிறுவனம்.. எவ்வளவு பாக்கி தெரியுமா?

Zomato.
Zomato.
Published on

ஜொமேட்டோ நிறுவனத்தின் வரிபாக்கியை செலுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ள ஜிஎஸ்டி வரி புலனாய்வு பிரிவு.

இந்தியாவின் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜொமேட்டோ நிறுவனம் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தாமல் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜொமேட்டோ நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த வருடாந்திர கணக்கு விவரங்களை ஆதாரமாக வைத்து ஜிஎஸ்டி வரி புலனாய்வு பிரிவு இயக்குனரகத்தின் புனே அலுவலகத்தில் இருந்து ஜொமேட்டோ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸில் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த விவரங்களின் அடிப்படையில் 401.7 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி நிலுவை உள்ளது கண்டறியப்பட்டு இருக்கிறது. இவற்றை உடனடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் சட்டம் 2017 பிரிவு 74(1) படி வரி தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜொமேட்டோ நிர்வாகம் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக நிறுவனம் தெரிவித்திருப்பது, ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு இயக்குனராகம் தெரிவித்திருக்கும் தகவல் அடிப்படையில் 2019 அக்டோபர் 29ஆம் தேதி முதல் 2022 மார்ச் மாதம் 31ம் தேதி வரையில் ஜிஎஸ்டி வரி நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அந்தக் காலகட்டத்தில் ஜொமேட்டோ நிறுவனம் ஒப்பந்த நிறுவனம் மூலமாக உணவு விநியோகத்தை மேற்கொண்டு வந்தது.

இதையும் படியுங்கள்:
2024ல் வருமான வரி தாக்கலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்!
Zomato.

இதனால் அந்நிறுவனம் வசூலித்த டெலிவரி கட்டணத்திற்கு தங்கள் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஜிஎஸ்டி இயக்குனரகத்திற்கு தகவல் அளிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com