

இந்தியாவின் மிகப் பெரிய குழுமங்களில் ஒன்றான டாடா நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் பல்வேறு வகையான கார்களை உற்பத்தி செய்கிறது, அவற்றில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் அடங்கும். இந்நிறுவனத்தின் டியாகோ, டிகோர், பன்ச், அல்ட்ராஸ், நெக்ஸான் மற்றும் ஹாரியர் போன்ற மாடல்கள் மிகவும் பிரபலமானவை. அந்த வரிசையில் இந்நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட 'Tata Nexon Dark Edition' காரை தற்போது சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இது பயனர்களை கவர்ந்திழுக்கும் வகையில் முழு கருப்பு நிற வெளிப்புறம், தனித்துவமான சக்கரங்கள் மற்றும் உட்புறத்தில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ண தீம் ஆகியவற்றுடன் ஜொலிக்கிறது. டாடா, இப்போது நெக்ஸானை பின்புற சன்ஷேடுகளுடன் (முன்னர் நெக்ஸான் EVல் அறிமுகப்படுத்தப்பட்டது), ஓட்டுபவருக்கு வசதியாக லெவல்-1 மேம்பட்ட அம்சங்களுடன் (ADAS) புதுப்பித்துள்ளது.
இதில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 5,500 ஆர்.பி.எம்.மில் 118 பி.எச்.பி பவரையும், 1,750 ஆர்.பி.எம்.மில் 170 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்டும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனும் உள்ளது.
இதுதவிர சி.என்.ஜி. வேரியண்டும் இடம் பிடித்துள்ளது. டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன், சன்ரூப், காற்றோட்டமான முன் இருக்கைகள், எல்.இ.டி. லைட் மற்றும் லெவல் 2 அடாஸ் பேக்கேஜ், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் வோய்ஸ்-அசிஸ்டட் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வாடிக்கையாளரை கவரும் சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது. மேலும் அதில் 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்டுடன் கூடிய கீலெஸ் என்ட்ரி ஆகிய நவீன அம்சங்களும் இதில் உள்ளது.
ADAS உடன் கூடுதலாக, ABS மற்றும் EBD உடன் பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360-டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் டாப்-ஸ்பெக் ஃபியர்லெஸ் பிளஸ் PS வேரியண்டுடன் வழங்கப்படுகிறது.
தொடக்க வேரியண்டான பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஷோரூம் விலை சுமார் ரூ.12.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடாஸ் உடன் கூடிய பெட்ரோல் டூயல் கிளட்ச் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.13.81 லட்சம். சி.என்.ஜி. சுமார் ரூ.13.36 லட்சம், டீசல் ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.14.15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.