இந்த 3 Government Apps இருந்தா போதும்... லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்!

3 Government Apps
3 Government Apps
Published on

இன்றைய நவீன உலகில் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளைத் தேடும் நபர்களில் நீங்களும் ஒருவரா? உங்களுக்காவே சூப்பரான 3 அரசு செயலிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

நமது இந்திய அரசு, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கவும், அதிக வருமானம் தரக்கூடிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், அரசு ஒப்பந்தங்களைப் (Government tenders) பெறவும் உதவும் 3 அற்புதமான செயலிகளை உருவாகியுள்ளது.

இவை வெறும் செயலிகள் அல்ல, உங்கள் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கும் சாவிகள்.

நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில், இந்த 3 செயலிகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்.

1. MyGov App:

இது என்பது வெறும் தகவல்களைப் பரிமாறும் தளம் மட்டுமல்ல.  உங்கள் அறிவையும், படைப்பாற்றலையும் பணமாக மாற்ற ஒரு வாய்ப்பு! மேலும், உங்கள் திறமைக்கு அரசு நேரடியாகவே பணம் செலுத்துகிறது.

  • இந்த செயலியில், வினாடி வினாக்கள், கணக்கெடுப்புகள் மற்றும் எளிய பணிகளைச் செய்து அதற்கேற்ற பணத்தை பெறலாம்.

  • கட்டுரை எழுதுதல், ஸ்லோகன்ஸ் (Slogans) உருவாக்குதல் அல்லது குறும்படப் போட்டிகளில் கலந்துகொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.

சில போட்டிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் பரிசுத்தொகை உண்டு!

2. Skill India Digital App:

வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்தச் செயலி ஒரு வரப்பிரசாதம்! ஏனெனில்,

  • செயற்கை நுண்ணறிவு (AI), கோடிங், நிதி மேலாண்மை என பல்வேறு துறைகளில் இலவசமாக சான்றிதழ் படிப்புகளைக் இது வழங்குகிறது.

  • நீங்கள் பெறும் சான்றிதழ்கள் முன்னணி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டவை.

  • பயிற்சி பெற்றவுடன், இந்த செயலியிலேயே வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பித்து, மாதம் ₹25,000 முதல் ₹1.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

கற்றல் மற்றும் வருமானம் ஈட்டல் என அனைத்தும் ஒரே செயலியில்!

இதையும் படியுங்கள்:
அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஈக்விட்டி நிதி... ஆனால்...
3 Government Apps

3. eProcurement Portal:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (MSME) இந்தச் செயலி ஒரு பொன்னான வாய்ப்பு.

  • உங்களுக்கென ஒரு தொழில் இருந்தால், இதில் பதிவு செய்து அரசு ஒப்பந்தங்களுக்கு (Government tenders) விண்ணப்பிக்கலாம்.

  • இதில், அரசு ஆண்டுதோறும் ₹2 லட்சம் கோடிக்கும் அதிகமான ஒப்பந்தங்களை (Tenders) வெளியிடுகிறது.

  • மேலும், உங்கள் தயாரிப்புகள் (Products) அல்லது சேவைகளை (Service) இந்த Portal மூலம் நேரடியாக அரசுக்கு விற்கலாம்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த இது ஒரு சிறந்த தளம்.

அப்புறம், இன்னும் ஏன் வெயிட்பண்றீங்க? இப்போதே இந்த செயலிகளைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் எதிர்காலத்தை நீங்களே வடிவமைக்கத் தொடங்குங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com