கையில காசு தங்க மாட்டேங்குதா? இந்த 3 யுக்திகளை ஃபாலோ பண்ணுங்க!

மாத சம்பளம் வாங்குபவர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் போன்ற அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய யுக்திகளான, 50/30/20 விதி (Rule), சிறு சேமிப்பு திட்டம், தங்கம் மற்றும் SIP இன்வெஸ்ட்மென்ட் வழிமுறைகள்... வாங்க பார்க்கலாம்...
coins, piggy bank, and savings jar on a table - சேமிப்பு
smart savings for a secure future - சேமிப்பு AI Image
Updated on

ன்றய காலகட்டத்தில் பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அதைச் சேமிப்பதும் முக்கியமானதாக உள்ளது. மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள், மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் என அனைவரும் தங்களின் வருமானத்திற்கேற்ப சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம். தேவைக்கு மட்டும் அல்ல அவசரகாலச் செலவுகளைச் சமளிக்கவும் இந்த சேமிப்பு உதவுகிறது. 

எவ்வாறு சேமிக்கலாம்?

நாம் வாங்கும் சம்பளத்திலேயோ, குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து வாங்கும் தின்பண்டத்திற்கான பணத்தையோ சேமித்து வைக்க பழகவேண்டும்.  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இப்பழக்கத்தை கையாள வேண்டும். நாம் வாங்கும் சம்பள பணத்திலிருந்து ஒரு சிறு பங்கினை சேமிப்பாக வைக்கும்போது அந்த சேமிப்பு பின்னால் நமக்கு உதவிகரமாக இருக்கும். இந்த சேமிப்பு பழக்கம் பணத்தை மட்டும் அல்ல, நாம் அன்றாட வாழ்வில் செலவிடும் வீண் செலவை தவிர்க்கவும் உதவிபுரிகிறது. இந்த சேமிப்பு பழக்கம் நம்மை எந்த ஒரு சூழ்நிலையிலும் பாதுகாக்கும்.

சேமிக்கும் முறைகள்:

50/30/20/ விதி (Rules), சிறு சேமிப்புத் திட்டம், தங்கம் மற்றும் SIP இன்வெஸ்ட்மென்ட் போன்ற திட்டங்கள் மூலம் சேமிக்கலாம்.

1) 50/30/20 விதி (Rule)

50% - அத்தியாவசிய தேவைகள் (NEEDS): அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் மளிகை பொருட்கள், ஒவ்வொரு மாதமும் கொடுக்கும் வாடகை பணம், மின் கட்டணம், நம் மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்கு செலவிடும் பணம்.

30% - விருப்பங்கள் (WANTS): நாம் விரும்பி வாங்கும் உணவு பொருட்கள், பொழுதுபோக்கு, மற்றும் ஷாப்பிங் செலவுகள்.

20% - சேமிப்பு: அவசர கால நிதி, SIP இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் இன்சூரன்ஸ்.

இதையும் படியுங்கள்:
தங்கம் வாங்குவது எப்படி? ஸ்மார்ட்டான முதலீட்டு வழிகள்!
coins, piggy bank, and savings jar on a table - சேமிப்பு

2) சிறு சேமிப்பு திட்டம் :

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. நம்மிடம் உள்ள சம்பளத்திலிருந்து ஒரு சிறு பகுதியை மாதந்தோறும் அல்லது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, அல்லது ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு முறை, இவாரெல்லாம் சேமிக்கும் முறை தான் சிறு சேமிப்பு திட்டம்.

தபால் அலுவலகம் (post office): தபால் அலுவலகத்தில் ரெக்கரிங் டெபாசிட் (RD) மற்றும் அஞ்சல் அலுவலக கிராம சுரக்ஷா யோஜனா. (Post Office Gram Suraksha Yojana)

பொது வருங்கால வாய்ப்பு நிதி (PPF): நீண்ட காலத்திற்கு நல்ல வட்டியும், சலுகையும் தரும்.

வங்கி சேமிப்பு: உங்கள் சம்பள கணக்கிலிருந்து  மாதந்தோறும் தானாகப் பணம் பிடிக்கும் (AUTO-DEBIT) வசதியைப் பயன்படுத்தி நமது சம்பளப் பணத்தை சேமித்துக் கொள்ளலாம். இது மிகவும் ஒரு எளிமையான ஒரு வழி. இதன் மூலம் நாம் ஒவ்வொரு மாதமும் தவறாமல் சேமிக்க முடியும்.

3) தங்கம் மற்றும் SIP இன்வெஸ்ட்மென்ட் :

தங்கம் : இப்போதெல்லாம் டிஜி கோல்ட் (digi gold) என்னும் ஆன்லைன் வலைத்தளம் உள்ளதால் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், நம்மால் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

SIP இன்வெஸ்ட்மென்ட்: முதலீடு செய்வதற்கு அதிகமான தொகை வேண்டும் என்பதில்லை. வெறும் ரூபாய் 100லிருந்தே நாம் முதலீடு செய்யலாம்.  SIP என்பது ஒரு சிறிய முதலீடுதான். சிறிய தொகை முதல் பெரிய தொகை வரை முதலீடு செய்யலாம்.

coins, piggy bank, and savings jar on a table - சேமிப்பு
coins, piggy bank, and savings jar on a table - சேமிப்பு

'சிறு துளி பெரு வெள்ளம்'என்பதுபோல், இன்று செய்யும் சிறு சேமிப்புகள் நாளைய பெரும் செலவுகளுக்கு அடித்தளமிடுகிறது.

சேமிப்பு என்பது பணத்தை வைத்திருப்பது மட்டுல்ல ; அது ஒரு நல்ல பழக்கமாகும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து, சிறு தொகையையாவது தொடர்ந்து சேமிப்பது எதிர்காலத்தில் பெரிய பலனைத் தரும். நிதி பாதுகாப்பு, மனநிம்மதி மற்றும் கனவுகளை நனவாக்கும் வலிமை ஆகியவற்றை சேமிப்பு வழங்குகிறது.

இன்றே சேமிக்க தொடங்குங்கள்... சிறு சேமிப்பு தான் பிற்காலத்தில் ஒரு பெரிய சேமிப்பாக உருவெடுக்கும். நாளை, நாளை என்று தள்ளிப் போடுவதை விட இன்றே தொடங்குங்கள். உங்கள் நாளைய பாதுகாப்பிற்காக இன்றே சேமியுங்கள்!

இந்த எளிய நிதி மேலாண்மை உத்திகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துவதன் மூலம், தேவையற்ற கடன்களிலிருந்து விடுபட்டு, அவசர காலச் செலவுகளை எளிதாகச் சமாளிக்கும் மன அமைதியைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், ஒரு சில வருடங்களிலேயே உங்களால் ஒரு பெரிய தொகையைச் சேமித்து உங்கள் கனவு வாழ்க்கையை நிஜமாக்க முடியும்.

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference: Post Office Saving Schemes

logo
Kalki Online
kalkionline.com