
விலைவாசி உயர்வு காரணமாக தற்போதைய நிலையில் ஒருவருடைய வருமானம் பற்றாக்குறையாக உள்ளது. ஆகவே பலரும் தாங்கள் பார்க்கக் கூடிய வேலையோடு கூடுதலாக வேலை செய்து சம்பாதிக்க வழிகளைத் தேடி வருகின்றனர். அந்த வகையில் நிலையான கூடுதல் வருமானத்திற்கான 5 வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. டிஜிட்டல் வேலைவாய்ப்பு :-
கிராபிக்ஸ் வடிவமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற திறமைகளை வைத்திருப்பவராக இருந்தால் டிஜிட்டல் வேலை வாய்ப்பு மூலம் அவர்களுக்கு Fiverr, Upwork போன்ற தளங்களில் வேலைகளை பெற முடியும். இந்த தளங்களில் மாதத்திற்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்வதன் மூலமாக ரூ.15,000 முதல் 25 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.
2. ஆன்லைன் பயிற்சி :-
ஆங்கிலம் கணிதம் அறிவியல் அல்லது தமிழ் போன்ற ஏதேனும் ஒரு தனி பாட பிரிவில் சிறந்து விளங்குபவர்கள் ஆன்லைன் பயிற்சி எடுக்கலாம். இதற்கு Vedantu, Unacademy போன்ற வலைதளங்களை பயன்படுத்தி ஆன்லைன் பயிற்சி மூலமாக கூடுதல் வருமானம் ஈட்டலாம் .
வார இறுதி நாட்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம்.
3. விளம்பரப்படுத்துவதன் மூலம் வருமானம் :-
பெரிய தளங்களின் துணை நிறுவனங்களாக சேர்ந்து அதாவது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் சேர்ந்து அவர்களுடைய பொருட்களை விளம்பரம் செய்வதன் மூலம் பணம் ஈட்ட முடியும். இதனை நீங்கள் instagram youtube போன்ற வலை பதிவு மூலம் விளம்பரப்படுத்தினால் கமிஷன் பெறுவதன் மூலம் உபரி வருமானம் ஈட்டலாம்.
4. பொருட்கள் இல்லாமல் வணிகம் :-
நாம் எந்த ஒரு பொருளையும் வாங்கி சேமிக்காமல் , ஆன்லைனில் ஆர்டர்களை வாங்கி, அந்த ஆர்டரை மூன்றாம் தரப்பினருக்கு டெலிவரி செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். குறிப்பாக Shopify, WooCommerce போன்ற மூன்றாம் தரப்பு தளங்களை தொடங்குவதன் மூலம் கூடுதல் வருமானத்தை சம்பாதிக்க முடியும்.
5. பகுதிநேர கடைகளின் மூலம் வருமானம் :-
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விருப்பம் இல்லாதவர்கள் வாரத்தின் இறுதி நாட்களில் அருகில் உள்ள சந்தைகள் மற்றும் உள்ளூர் கண்காட்சிகளில் கடை அமைத்து வருமானம் ஈட்டலாம். இங்கு நாம் வீட்டில் தயாரித்த பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவற்றை கடையமைத்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். மேலும் உங்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்த சந்தைப்படுத்துதல் நல்ல நோக்கமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய ஐந்து வழிமுறைகளும் கூடுதல் வருமானத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.