மாத சம்பளம் வாங்க போறீங்களா பாஸ்? இந்த 5 விஷயங்கள நோட் பண்ணுங்க!

5 tips to saving
5 tips to saving

சிறு வயதிலிருந்தே மாணவர்களிடத்தில் சேமிப்புப் பழக்கத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். 'சிறுதுளி பெருவெள்ளம்' என்ற பழமொழியின் மூலம் சேமிப்பின் நன்மைகளை எடுத்துரைக்கலாம். சேமிப்பில் நாம் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டுமோ அதேபோல், நிதி திட்டமிடலை முன்னெடுத்து நிதி தவறுகளை தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும். 

இள வயதில் நிதி சேமிப்பில் பலரும் பலவிதமான தவறுகளை இழைக்கின்றனர். அடிப்படைத் தேவைகளுக்கு செலவு செய்வது முதல் அதிக வட்டிக் கடன்கள் சேர்வதைத் தவிர்த்தல் முதலான அனைத்து நிதி தொடர்பான விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். இள வயதில் நாம் தெரியாமல் செய்யும் நிதி தவறுகளை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் மற்றும் நிதி திட்டமிடலை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி இப்போது காண்போம். 

செலவு கணக்கு: நம்முடைய மாத வருமானம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் மட்டுமே இருக்க வேண்டும். இதுதான் நிதி திட்டமிடலில் மிகவும் முக்கியம். ஆகவே, மாதாந்திர செலவு கணக்கில் அதிக கவனத்தை நாம் செலுத்த வேண்டும். தொடர்ந்து மாதாந்திர பட்ஜெட்டை வகுத்துக் கொண்டு, அதற்கு ஏற்றபடி செலவுகளை செய்ய வேண்டும். நிதி தொடர்பான இலக்குகளை தீர்மானிப்பது, மாதாந்திர பட்ஜெட்டை வகுப்பதற்கு உதவுகிறது.

அதிக வட்டி கடன்: வாகன கடன் மற்றும் வீட்டுக் கடன் போன்றவை அவசியமானவை என்றாலும், கடன் வசதிகள் நமக்கு சுமையாக மாறி விடாமல் இருப்பது மிக அவசியம். அதிலும் குறிப்பாக அதிகளவு வட்டி கொண்ட தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் போன்றவை சரியாக கையாளப்படவில்லை என்றால், நிதி தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது தான் நல்லது.

அவசரகால நிதி: இள வயதில் நாம் ஒரு வேலையில் சேர்ந்ததுமே, பல வகையான நிதி இலக்குகளும், அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். இருப்பினும் எதிர்பாராத அவசர செலவுகளுக்காக நாம் மாதந்தோறும் சேமிப்பதை மறந்து விடக் கூடாது. இவ்வகையான நிதி அவசர கால நிதி என எடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிர்பாராத நெருக்கடிகளின் போது, இந்த நிதி நமக்கு கைகொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
தங்கத்தின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏன்? அதை எவ்வாறு கணிப்பது?
5 tips to saving

ஓய்வுகாலத் திட்டமிடல்: பொதுவாக அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு, ஓய்வுகாலத் திட்டமிடலை புறக்கணிப்பது தான். வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கியதும் சேமிப்பு மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, ஓய்வு காலத் திட்டமிடலையும் தொடங்க வேண்டும். அப்போது தான் கூட்டு வட்டியின் பலன்களைப் பெற முடியும்.

வாழ்வியல் தேவைகள்: மாறிவரும் நவீன வாழ்க்கையில் நமக்கான வசதிகள் அதிகரித்தாலும், வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்துவதற்கு முன்பு முறையான முதலீடு, தேவையான சேமிப்பு மற்றும் காப்பீட்டு பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். நாம் நம்முடைய இள வயதிலேயே நிதித் தேவைகளில் திட்டமிட்டு செயல்படுவதன் வாயிலாக, ஓய்வு பெறும் காலத்தில் வளமாக வாழலாம்.

இளம் வயது முதலே, மாதாந்திர வருமானப் பணியின் போதே நமது நிதித் தேவைகளை சரியான முறையில் திட்டமிட்டு, நிதி தவறுகளைக் குறைப்போம்; ஓய்வு காலத்தில் யாரையும் நம்பிடாமல் வளமுடன் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com