சம்பாதிக்கத் தொடங்குறீங்களா? இந்த மோசமான 6 பணப்பழக்கங்கள் பற்றி முதல்லயே தெரிஞ்சுக்கோங்க!

போதுமான நிதி தேவை...
போதுமான நிதி தேவை...Image credit - youngpeopletoday.net

னிதர்கள் வளமாக வாழ போதுமான நிதி தேவை. ஒவ்வொருவரின் சம்பாத்தியமும் பிறரிடமிருந்து வேறுபடலாம். ஆனால், சரியான நிதிப்பழக்கம் ஒருவருக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். மோசமான நிதிப்பழக்கம் வறுமைக்கு வழிவகுக்கும். சிலர் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பற்றாக்குறை வாழ்க்கையை வாழ்வார்கள். இதற்கு அவர்களுடைய பணப்பழக்கங்களே காரணமாகும். மோசமான ஆறு பணப் பழக்கங்கள் எவை என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 

மோசமான ஐந்து பணப் பழக்கங்கள் எவை? 

1. போதிய வருமானம் இல்லாமை:

ஒருவர் தன் வாழ்க்கைக்குப் போதிய அளவு வருமானம் ஈட்டவேண்டும். தன் அடிப்படைச் செலவுகளை ஈடுகட்ட தேவையான அளவு வருமானம் தேவை. இல்லை என்றால் அது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். அத்தியாவசிய தேவைகளைச் சந்திப்பதற்குக்கூட சவாலாக இருக்கும். ஒவ்வொருவரின் அடிப்படை செலவுகள் வேறுபடும். ஒருவர் ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டிலிருந்தால் இன்னொருவர் 30 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் இருக்கலாம்.  முதலாமவரின் மாத பணத் தேவை பத்தாயிரத்திற்குள் இருக்கலாம்.  இரண்டாமவரின் மாத தேவை ஒரு லட்சத்திற்குள் இருக்கலாம். இருவரும் தங்கள் தேவைக்கு ஏற்ப மாத வருமானத்தை ஈட்டுவது அவசியம்.

2. நல்லவேலை தேடாமல் இருத்தல்:

தன் மாதச் செலவுகள், தேவைகளை நன்றாக அறிந்திருந்தும் அதற்கு ஏற்ப சரியான ஒரு வேலை அல்லது தொழில் அமைத்துக்கொள்வது ஒருவருக்கு முக்கியம். வருமான வளர்ச்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. வருமானத்தை அதிகரிப்பதற்கான வழியைத் தேடாமல் இருப்பது சிக்கல் வர வழி வகுக்கும். நிதி முன்னேற்றத்தைத் தடுக்கும். மேலும், தேக்கமான நிதி நிலையில் வைத்திருக்கும். தன் தேவைக்கேற்ப நல்ல வேலை அல்லது தொழிலைத் தேடி அதற்கு ஏற்ப கடினமாக உழைத்தால் அவர்களும்  நன்றாக வாழமுடியும்.

3. வரவுக்கு மீறி செலவு செய்வது:

மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தால் 11 ஆயிரம் ரூபாய் செலவு செய்பவர்கள் இருக்கிறார்கள். எப்போதும் அவர்கள் பணத்தேவையிலேயே இருப்பார்கள். அதிகமான கடன் சுமையில் சிக்கித் திண்டாடுவார்கள். இவர்கள் எப்போதும் சேமிப்பு அல்லது முதலீடுகளைப் பற்றி நினைத்துகூடப் பார்ப்பது இல்லை.  வருமானத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தினால் குறைந்த அளவு சம்பாதித்தாலும் ஒருவர் கடன் வாங்காமல் வாழமுடியும். அதற்கு ஏற்ப தன் தேவைகளைச் சுருக்கி கொள்ள வேண்டும். குறைந்த அளவு சம்பளம் வாங்கும்போது கார் போன்ற வசதிகள், அதிக வாடகை கொடுத்து பெரிய வீட்டில் இருப்பது, தேவையில்லாமல் ஊர் சுற்றுவது, ஓட்டலில் உண்பது, அதிக துணிகள் வாங்குவது என்று இலக்கில்லாமல் செலவழித்துவிட்டுத் திண்டாடுவார்கள். 

 சேமிக்கும் பழக்கம்...
சேமிக்கும் பழக்கம்...Image credit - bringyourfinancestolife.com

4. அதிக வட்டிக்கு கடன் வாங்குவது:

வட்டிக்குக் கடன் வாங்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். இல்லை என்றால் எவ்வளவு சம்பாதித்தாலும் அது வட்டி கட்டவே சரியாக போய்விடும். கந்து வட்டியில் ஆரம்பித்து மாதாந்திர தவணையில் பொருட்கள் வாங்குவது, அதிக ஆடம்பரமான பொருட்களைக் கடனில் வாங்குவது, கிரெடிட் கார்டுகளை நம்பி இருப்பது போன்றவை ஒருவரை அதிகமான நிதிச்சுமையில் ஆழ்த்தும். கடன் சூழலில் சிக்கவைக்கும். மாதாந்திர வருமானத்தில் பெரும்பகுதி வட்டி கட்டவே போய்விடும். அடிப்படைத் தேவைகளைக்கூட சமாளிக்க முடியாமல் திண்டாடுவார்கள். பின்பு மேலும் மேலும் கடன் வாங்கி தன்னுடைய நிதி நிலைமையை சீர் குலைத்து விடுவார்கள். 

5. சேமிக்கும் பழக்கம் இல்லாதது:

ஒருவர் எவ்வளவு குறைவாக வருமானம் ஈட்டினாலும் சேமிப்பில் அக்கறை காட்ட வேண்டும். தன் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பிற்குச் செலுத்தி விட்டுதான் செலவு செய்யவே ஆரம்பிக்க வேண்டும். சேமிப்பிற்கு என்று தனியாக ஒரு தொகையை எடுத்து வைத்த பின்புதான் மாதாந்திர பட்ஜெட் போட வேண்டும். பலர் செய்யும் பெருந்தவறு செலவு செய்துவிட்டு பின்பு சேமிக்கலாம் என்று எண்ணுவதுதான். ஒருவர் பத்தாயிரம் ரூபாய் மாதம் சம்பாதிக்கிறார் என்றால் 2000 ரூபாயை முதலிலேயே சேமிப்பிற்கு என்று ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 8000 ரூபாயில்தான் செலவுகளை சமாளிக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
ரஸ்க் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரிஸ்கா? விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்!
போதுமான நிதி தேவை...

6. போதிய நிதிக்கல்வி இல்லாமை:

பணம் சேமிக்கும் அல்லது பணத்தைப் பெருக்கும் நிதி கல்வி ஒருவருக்கு அவசியம் வேண்டும். சேமிப்போடு சரியான முதலீடுகளை செய்ய வேண்டும். கூட்டு வட்டி தரும் முதலீடுகளில் பணத்தை போட வேண்டும். நல்ல ரிட்டர்ன்ஸ் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். பாதுகாப்பான நிதி முதலீடுகளைத் தகுந்த ஆலோசனை தருபவரிடம் கேட்டு அறிந்து, அதற்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். 

சரியான நிதி பழக்கங்களை கடைப்பிடித்தால் ஒருவர் குறைவாக சம்பாதித்தாலும் நன்றாக வாழ முடியும். அதுபோல நிறைய சம்பாதிப்பவர் மோசமான நிதிப் பழக்க பழக்கம் உள்ளவராக இருந்தால் அவருடைய வாழ்க்கை திண்டாட்டமாகத்தான் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com