Is eating rusk a health risk? Nutritionist Dharani Krishnan explains
Is eating rusk a health risk? Nutritionist Dharani Krishnan explainshttps://tamil.boldsky.com

ரஸ்க் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரிஸ்கா? விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்!

Published on

ஸ்க் என்பது பிஸ்கட்டைப் போன்ற ஒருவகையான கடினமான ரொட்டியாகும். இது கோதுமை மாவு, சர்க்கரை, முட்டை, பால் பவுடர் மற்றும் வெண்ணிலா போன்ற பொருட்களால்தான் தயாரிக்கப்படுகிறது. இது மொறுமொறுப்பான தன்மையைக் கொண்டது. ரஸ்க் பெரும்பாலும் சிற்றுண்டியாகவோ அல்லது தேநீர் போன்ற பானங்களுடனோ எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ரஸ்க் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. பின்பு படிப்படியாக அதனோடு பால் ஊற்றி, பின்னர் அந்த மாவானது ஒரு மென்மையான தன்மையை அடையும் வரையில் பிசையப்படுகிறது. மாவை ஒரு கட்டையாக வடிவமைத்து பேக்கிங் தட்டில் வைக்கப்படுகிறது. அதன் பின்னர் அந்த மாவை பொன்னிறமாகும் வரை சுட வேண்டும். அது வெந்ததும், சிறிது நேரம் ஆறவிட்டு அவை ரஸ்க் துண்டுகளாக வெட்டப்படுகிறது. அவ்வாறு வெட்டப்பட்ட துண்டுகள் மிருதுவாகவும் உலர்ந்தும் வரும் வரையில் அடுப்பில் வறுக்கப்படுகிறது. இறுதியாக, அவை குளிர்ந்த காற்று புகாத நிலையில் சேமிக்கப்படுகிறது. இந்த செயல்முறையானது நாம் உண்ணக்கூடிய ரஸ்க்குகள் நீண்ட நாள் வரை இருக்கும்படியான தனித்துவமான அமைப்பை கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.

ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்
ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்https://www.youtube.com

இனி, ரஸ்க் சாப்பிடுவது நமது உடலுக்கு நன்மையா அல்லது தீமையா என்பதை விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

“பெரும்பாலான வகை ரஸ்குகளில் சர்க்கரை அதிகமான அளவில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, மைதாவில் இருந்துதான் இது தயாரிக்கப்படுகிறது. இதில் நிறைய சர்க்கரை இருப்பதால் ரஸ்க் ஆரோக்கியமானது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது ஆரோக்கியமானது அல்ல. ரஸ்க் மட்டுமல்ல, பிரட்டும் அப்படித்தான். இவை இரண்டிற்கும் ஒரே வேறுபாடு பிரட் மிகவும் லேசாக இருக்கிறது. ஆனால் ரஸ்க் மிகவும் கடினமானதாக இருக்கிறது” அவ்வளவுதான்.

Q

ரஸ்க் பழைய பிரட்டுகளால் தயாரிக்கப்படுகிறதா?

A

இல்லை, அவை பழைய பிரட்டுகள் மூலம் தயாரிக்கப்படுவதில்லை. ஆனால், பிரட் செய்வதற்காக எடுத்து வைக்கப்பட்ட நாள்பட்ட மாவுகளைப் பயன்படுத்தி சிலர் ரஸ்க் தயாரிப்பதாக அறிகிறேன்.

Q

ரஸ்க் அதிகமாக சாப்பிவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

A

ரஸ்க்கில் அதிகளவிலான சர்க்கரை மற்றும் மைதா நிறைந்திருக்கின்றன. இவை இரண்டுமே அதிகப்படியான கலோரி நிறைந்த உணவுப்பொருட்களாகும். அதுமட்டுமின்றி, இதில் அதிகப்படியான ஃபேட்டும் நிறைந்திருக்கிறது.

Q

ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

A

ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. அதுதான் உண்மை.

Q

உடலில் எதுபோன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் ரஸ்க் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்?

A

பொதுவாகவே, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் பாதிப்பு உள்ளவர்கள் கோதுமை கலந்த எந்தப் பொருளாக இருந்தாலும் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் ரஸ்க் மைதா மற்றும்  கோதுமை கலந்துதான் தயாரிக்கப்படுகிறது.

Q

ரஸ்க் சாபிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

A

நிச்சயமாக! ஒன்று அல்லது இரண்டு ரஸ்க்குகள் சாப்பிடுவது சாதாரணம்தான். ஆனால், சிலர் ஒரே நேரத்தில் பசிக்காக பல ரஸ்க்குகளை சாப்பிடுகின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நமது உடல் ஆரோக்கியமாக செயல்பட பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமக்குத் தேவை. நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் ரஸ்க் மற்றும் பிஸ்கட்டுகளால் நமது ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. மேலும், இந்த ரஸ்க் சாப்பிடுவது உங்களது உடலுக்கு நிச்சயம் ரிஸ்க்தான்!

logo
Kalki Online
kalkionline.com