40 வயதுக்கு மேல் சேமிப்பைத் தொடங்கும்போது கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! 

7 Things to Consider When Starting Savings Over 40!
7 Things to Consider When Starting Savings Over 40!
Published on

40 வயது என்பது ஒருவரது வாழ்க்கையின் மிக முக்கிய திருப்புமுனை ஆகும். இதுவரை பல பொறுப்புகள், குடும்பம், தொழில் என பல காரணங்களால் சேமிப்பு குறித்த கவலை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இனி தாமதிக்காமல் சேமிப்பைத் தொடங்க வேண்டியது அவசியம். ஏனென்றால், ஓய்வு காலம் நெருங்கி வருகிறது, எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம், குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற பெரிய செலவுகள் வரக்கூடும். இந்தப் பதிவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் சேமிப்பை தொடங்கும்போது கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

  1. தற்போதைய நிதி நிலைமையை மதிப்பீடு செய்யுங்கள்: உங்களது எல்லா வருமான ஆதாரங்கள் மற்றும் செலவுகளை பட்டியலிடுங்கள். கடன் இருந்தால் அவற்றை எவ்வாறு அடைக்க முடியும் என்பதைத் திட்டமிடுங்கள். அவசர நிதிக்கு எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும். 

  2. நிதி இலக்குகளை நிர்ணயுங்கள்: ஓய்வு காலத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?  போன்றவற்றை சரியாகக் கணக்கிட்டு, அவற்றை அடையக்கூடிய நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். 

  3. சேமிப்பின் முக்கியத்துவத்தை உணருங்கள்: சேமிப்பு என்பது எதிர்கால பாதுகாப்புக்கான முதலீடு. தவறாமல் சேமிப்பதன் மூலம், எதிர்கால சூழ்நிலைகளில் நிம்மதியாக இருக்கலாம். சேமிப்பு மூலம் உங்கள் நிதி சுதந்திரத்தை நீங்கள் அடைய முடியும். எனவே, சேமிப்பின் முக்கியத்துவத்தை இப்போதாவது உணருங்கள். 

  4. சரியான சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்யுங்கள்: பல்வேறு சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் இலக்குகள், பணத் தேவை மற்றும் வருமானத்திற்கு ஏற்ப சரியான திட்டத்தை தேர்வு செய்யுங்கள். வங்கி FD, PPF, Mutual funds, Equity போன்ற பல்வேறு சேமிப்பு விருப்பங்கள் உள்ளன. 

  5. தொடர்ச்சியாக சேமிக்கவும்: சேமிப்பை ஒரு பழக்கமாக்கிக் கொண்டு தொடர்ச்சியாக சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பதை கட்டாயமாக்கவும். தானாக உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து சேமிப்பு கணக்குக்கு பணம் செல்லும்படி ஆட்டோமேஷன் செய்யுங்கள். 

  6. சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்: உங்களது சேமிப்பை அதிகரிக்க தேவையற்ற செலவுகளை குறைக்கவும். கூடுதல் வருமானம் ஈட்டும் வழிகளைத் தேடுங்கள். தேவையில்லாத சொத்துக்களை விற்பது மூலமாகவும் உங்களது சேமிப்பை அதிகரிக்கலாம். 

  7. நிதி ஆலோசகரின் உதவியை நாடுங்கள்: உங்களுக்கு பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதில் தெளிவில்லை என்றால், நிதி விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. நிதி ஆலோசகர் உங்கள் நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து, உங்களுக்கானா சிறந்த திட்டத்தை பரிந்துரைப்பார். 

இதையும் படியுங்கள்:
55 வயதைக் கடந்தவர்கள் ஜாக்கிரதை... கணைய பாதிப்பும் அதன் அறிகுறிகளும்! 
7 Things to Consider When Starting Savings Over 40!

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் சேமிப்பை தொடங்கும்போது மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம். சேமிப்பு என்பது ஒரு நீண்ட கால செயல்முறை. தொடர்ச்சியான முயற்சியும், திட்டமிடலும் இருந்தால் உங்களது நிதி இலக்குகளை நீங்கள் எளிதாக அடைய முடியும். எனவே, இன்றே சேமிப்பைத் தொடங்கி, உங்களது எதிர்காலத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com