Adani Group Shares
Adani Group Shares

ஒரே நாளில் உச்சத்தைத் தொட்ட அதானி குழும பங்குகள்!

Published on

நீண்ட நாட்களாக முடங்கி இருந்த அதானி குழுமத்தின் பங்குகள் ஒரே நாளில் 1.20 லட்சம் கோடி ரூபாய் வரை ஏற்றம் கண்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்று முதல் தொடர் ஏற்றத்தை நோக்கி சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று 20,096. 60 ரூபாய்க்கு வர்த்தகமாகி புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. அதே நேரம் அதானி குழும பங்குகளும் நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னேற்றத்தை சந்தித்திருக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பார்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அதானி குழுமத்தினுடைய பங்குகள் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தன. இதனால் நீண்ட மாதமாக அதானி நிறுவனத்தினுடைய பங்குகள் சுணக்கமான வர்த்தகத்தையே மேற்கொண்டு பங்குச்சந்தையில் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் ஹிண்டன்பார்க் ஆய்வறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் வாதங்கள் முடிவடைந்து இருக்கிறது. மேலும் ஹிண்டன் பார்க் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்திய செபி, அதானி குழுமத்தின் மீது எவ்வித குற்றச்சாட்டையும் குறிப்பிடவில்லை. அதே நேரம் செபியின் விசாரணை மீது குற்றம் சாட்ட முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட்டும் கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மழை கால அவசிய உணவு நெய்: ஏன் தெரியுமா?
Adani Group Shares

உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு அதானி குழுமத்திற்கு சாதகமாக இருக்கும் என்று பொருளாதார சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் முன்னேற்றத்தை கண்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஒரே நாளில் மட்டும் 15 பில்லியன் டாலர்களுக்கு அதானி குழும பங்குகள் வர்த்தகமாகி இருக்கின்றன. இவ்வாறு இந்திய மதிப்பில் 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகியுள்ளது. இது 13 சதவீத வளர்ச்சியாகும். ஒரே நாளில் அதானி குழும பங்குகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டிருப்பதால் பங்குகளை கைவசம் வைத்திருந்தவர்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com