உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் வரலாறு காணாத முன்னேற்றம் கண்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார, வர்த்தக ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பார்க், அதானி குழுமம் போலியான தோற்றத்தை உருவாக்குவதாக குற்றச்சாட்டை தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அதானி குழுமத்தினுடைய ஒட்டுமொத்த நிறுவனங்களினுடைய பங்கும் வரலாறு காணாத அளவில் சரிவைக் கண்டது. இது அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஹிண்டன் பார்க் அறிக்கை தொடர்பான விசாரணையை தொடங்கியது. இது தொடர்பாக அதானி நிறுவனத்திடம் பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று செபியின் விசாரணை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் தொடர்ந்து இவ்வழக்கை செபியே விசாரிக்கும் என்று தீர்ப்பை வழங்கியதை அடுத்து அதானி குழுமத்தினுடைய பங்குகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டது. மேலும் உண்மை வென்று விட்டது. எங்களுடன் துணை நின்றவர்களுக்கு எனது நன்றி என்று அதானி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் அதானி குழுமத்தினுடைய 10 நிறுவனங்களினுடைய விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இவ்வாறு பங்கு சந்தை மதிப்பு 63,703 ரூபாய் உயர்ந்து, 15.08 லட்சமாக முன்னேற்றம் கண்டது. மேலும் அதானிக் குழுமத்தினுடைய வர்த்தக சந்தை மதிப்பு 1.88 லட்சத்தில் இருந்து 15.62 லட்சமாக முன்னேற்றத்தைக் கண்டது. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய நிறுவனத்தின் பங்கு மிகப் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு இருப்பது சர்வதேச பங்குச்சந்தையில் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.