தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்குகிறது Adidas!

Adidas in Tamil Nadu.
Adidas in Tamil Nadu.

அடிடாஸ் நிறுவனம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில், தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது.

தமிழ்நாடு அரசு பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை பெற தொடர் முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலகளாவிய பிரபல நிறுவனங்களில் ஒன்றான அடிடாஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன் வந்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு தற்போது வெளியிட்டு இருக்கிறது.

அடிடாஸ் நிறுவனம் முதல் முறையாக சீனாவை தாண்டிய ஆசிய காந்தியத்தில் தன்னுடைய முதல் கட்ட முதலீட்டை தமிழ்நாட்டின் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கிறது. அடிடாஸ் குளோபல் பிசினஸ் சர்வீஸ் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு அகில் கபூர் தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் ஜிபிஎஸ் உலகளாவிய கொள்முதலின் துணைத் தலைவராகவும், ஜிபிஎஸ் இந்தியாவின் தலைவராகவும் உள்ளார்.

அடிடாஸ் நிறுவனம் தனது எல்லை தாண்டிய சர்வதேச செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் வரும் ஜனவரி 7, 8 ஆகிய நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தத்தை உறுதி செய்கிறது.

இதையும் படியுங்கள்:
1000 Paytm ஊழியர்கள் பணி நீக்கம்.. AI காரணமா?
Adidas in Tamil Nadu.

அடிடாஸ் நிறுவனத்தினுடைய இந்த முதலீடு தமிழ்நாட்டினுடைய நிதி வளர்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பை செலுத்தும் என்றும், இதன் மூலம் 1000 முதல் 1500 நபர்கள் வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களினுடைய ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார மாநிலம் என்ற நிலையின் பெரும் பகுதியை எட்ட இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com