1000 Paytm ஊழியர்கள் பணி நீக்கம்.. AI காரணமா?

1000 Paytm employees sacked.
1000 Paytm employees sacked.

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதிக்கத்தால், எதிர்காலத்தில் மனிதர்களின் பல வேலைகள் பரிபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் உலகில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இந்த தொழில்நுட்பத்தால் பல வேலைகள் முற்றிலுமாக மாறும் அபாயம் இருப்பதாக பல புதிய அறிக்கைகள் கூறுகின்றன. 

இந்நிலையில் Paytm நிறுவனம் திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதாவது பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன் லிமிடெட் என்ற நிறுவனம், அதிரடியாக இந்த ஒரு முடிவை எடுத்துள்ளது. இதை பேடிஎம் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். குறிப்பாக இந்த ஆட்குறைப்பு ஆபரேஷன் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் நடந்துள்ளது. 

டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்கள் அவர்களின் செலவுகளைக் குறைப்பதற்காக பல செயல்பாடுகளுக்கு ஏஐ மாடலை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. மீண்டும் மீண்டும் ஒரே வேலையை செய்யும் நபர்களை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக AI tool பயன்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

மேலும், அந்நிறுவனம் ஆட்டோமேஷனை நோக்கி நகர்வதாகவும, மீண்டும் மீண்டும் ஒரே பணியை செய்யும் பணியாளை மாற்றி அமைப்பதே அவர்களின் திட்டம் என்றும், இதனால் செலவுகளை குறைத்து அதிக செயல் திறனை ஏற்படுத்தி ஊழியர்களின் செலவை 15 சதவீதம் வரை குறைக்க முடியும் எனக் கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்:
ஆபரேஷன் செய்யும் ஏஐ.. வியக்க வைக்கும் தொழில்நுட்பம்!
1000 Paytm employees sacked.

இது தவிர முறையாக வேலை செய்யாத பலரையும் தொடர்ந்து மதிப்பீடு செய்து, அவர்களை நீக்குவதற்கான முடிவை பேடிஎம் நிறுவனம் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. பேடிஎம் நிறுவனம் தற்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால் அவர்களின் செலவுகளைக் குறைத்து, சந்தையில் முன்னேறுவது கட்டாயமாகிறது. 

எதிர்காலத்தில் ஏஐ கருவிகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், ஆட்குறைப்பு வரும் காலத்திலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com