வந்தாச்சி ஏர்டெல் பிக்சட் டெபாசிட் திட்டம்: வட்டி எவ்ளோ தெரியுமா?

Airtel FD
Airtel FD
Published on

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. அவ்வரிசையில் தற்போது வங்கிகளுக்கு இணையாக பிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏர்டெல் வழங்கும் பிக்சட் டெபாசிட்டில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது. வாங்க தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், முதலீட்டுத் திட்டத்திலும் கால்தடம் பதித்து விட்டது. ஏற்கனவே தனிநபர் கடன் வழங்கல், கிரெடிட் கார்டு வசதி, நகைக் கடன் மற்றும் இஎம்ஐ கார்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக பிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் பொதுமக்கள் பலரும் ஏர்டெல்லின் திட்டத்தையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்வதற்கும், பல்வேறு சேவைகளை வழங்கி மேலும் வருவாய் ஈட்டுவதுமே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. முக்கிய வங்கி சாரா நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களுடன் ஏர்டெல் ஃபைனான்ஸ் கூட்டு சேர்ந்து பிக்சட் டெபாசிட் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. முற்றிலும் டிஜிட்டல் முதலீடான இந்தத் திட்டம், “ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks)” செயலியில் கிடைக்கிறது.

ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் பிக்சட் டெபாசிட்டில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம். இதற்காக தனியே வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வசதி ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது. வெகு விரைவில் iOS சாதனங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் முறையில் மூன்றி எளிய வழிமுறைகளைப் பின்பற்றி முதலீட்டைத் தொடங்க ஏர்டெல் வழிவகை செய்துள்ளது.

1. முதலில் உங்களின் முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப பிக்சட் டெபாசிட் திட்டத்தை ஒப்பிட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. தங்களது விவரங்களை அளித்த பிறகு, KYC-ஐ முடிக்க வேண்டும்.

3. ஏற்கனவே இருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து யுபிஐ வழியாக பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பணத்தைச் செலுத்தலாம். E

இதையும் படியுங்கள்:
ரெக்கரிங் டெபாசிட் vs பிக்சட் டெபாசிட்: எதில் முதலீடு செய்தால் அதிக இலாபம்?
Airtel FD

ஏர்டெல்லின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 9.1% வட்டி விகிதத்தில் உறுதியான மற்றும் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியும்.‌ வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், முதலீட்டாளர்களின் பார்வை இனி ஏர்டெல் மீது திரும்பவும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டியை அவ்வப்போது குறைத்தும், உயர்த்தியும் வருகிறது. இது போதாதென்று பல நிதி நிறுவனங்களும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன. இந்நிலையில் ஏர்டெல்லின் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பது தெரியவில்லை. ஒருவேளை ஏர்டெல் சிம் கார்டு பயன்படுத்தும் நபர்கள், இதில் முதலீடு செய்ய முற்படலாம். ஏனெனில் ஏற்கனவே ஏர்டெல் சிம் வைத்திருக்க நபர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் சலுகைகளை வழங்க வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com