அசாத்ய ரோக் யோஜனா: புற்றுநோய், இதய நோய்களுக்கு ₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை!விண்ணப்பிப்பது எப்படி?

Asadhya Rog Yojana - இலவச சிகிச்சை
Asadhya Rog Yojana - இலவச சிகிச்சைAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

அசாத்ய ரோக் யோஜனா (Asadhya Rog Yojana) என்பது ஏழை எளிய மக்களுக்கான மிகக்கடுமையான நோய்களுக்கான அதாவது புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, இதயக்கோளாறுகள் போன்ற தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க அரசே ஏற்றுக்கொண்டு இலவசமாக வழங்கிவரும் ஒரு திட்டமாகும்.

உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கு கடுமையான நோய்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு நிதி உதவி வழங்கும் ஒரு அரசு நலத்திட்டம் இது.

இந்தியாவில் இத்திட்டம் ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 'அசாத்ய ரோக் யோஜனா' என்ற பெயரில் தனி நிதியாகவும், மகாராஷ்டிராவில் 'மகாத்மா ஜோதிராவ் பூலே ஜன் ஆரோக்கிய யோஜனா' (MJPJAY) போன்ற விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களாகவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இலவச சிகிச்சை பெற தேவையான முக்கிய தகுதிகள் மற்றும் நடைமுறைகள்;

1) திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

*நிதி உதவி:

இத்திட்டத்தின் கீழ் தகுதியான நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. புற்றுநோய், தீவிர இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கான சிகிச்சைக்கு ரூ.5,00,000 வரை நிதி உதவி வழங்கப் படுகிறது. அறுவை சிகிச்சை, மருத்துவமனை அறைக் கட்டணம், மருந்துகள் மற்றும் இதர மருத்துவச் செலவுகள் இதில் அடங்கும். இந்தத்தொகை நேரடியாக நோயாளி சிகிச்சை பெறும் மருத்துவமனையின் கணக்கிற்கு மாற்றப்படும்.

*இலவச சிகிச்சை:

பொதுவாக ஆயுஷ்மான் பாரத் போன்ற பொதுக் காப்பீட்டுத் திட்டங்களில் முழுமையாக உள்ளடக்கப் படாத அல்லது மிக அதிக செலவு வைக்கும் 21க்கும் மேற்பட்ட தீவிர நோய்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் (உதாரணத்திற்கு லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் - KGMU) அனுமதிக்கப்படும் ஏழை நோயாளிகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.

*விலை உயர்ந்த மருந்துகள்:

உயிர் காக்கும் மற்றும் அதிக விலை கொண்ட மருந்துகள், ஊசிகள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகின்றன.

Asadhya Rog Yojana - இலவச சிகிச்சை
Asadhya Rog Yojana - இலவச சிகிச்சைAI Image

உயிர் காக்கும் இலவச சிகிச்சை பெற விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள்;

2) திட்டத்தின் தகுதிகள் மற்றும் நடைமுறைகள்:

*பொதுவாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் அந்தியோதயா அட்டை வைத்துள்ளவர்கள் இத்திட்டத்திற்கு முழுமையாகத் தகுதியானவர்கள்.

*நோயாளிகள் தங்கள் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் அல்லது சிறப்பு மருத்துவ மையங்களை அணுக வேண்டும். இதற்கான சிகிச்சையை எம்பேனல் செய்யப்பட்ட மத்திய/மாநில அரசு மருத்துவமனைகளில் அல்லது எய்ம்ஸ் (AIIMS) போன்ற அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி நிறுவனங்களில் மட்டுமே பெற முடியும்.

*நோயாளி வேறு எந்தவொரு காப்பீட்டுத் திட்டம் அல்லது அரசு அமைப்பிலிருந்தும் அதே சிகிச்சைக்கு நிதி உதவி பெற்றிருக்கக் கூடாது.

*திட்டத்திற்கான விண்ணப்பத்தை மாநில சுகாதாரத்துறை அல்லது மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்து, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இச்சலுகையைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
தங்கம் வாங்குவது எப்படி? ஸ்மார்ட்டான முதலீட்டு வழிகள்!
Asadhya Rog Yojana - இலவச சிகிச்சை

3) தேவையான ஆவணங்கள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவரால் சான்றளிக்கப்பட்டது).

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான சான்று (BPL ரேஷன் கார்டு)

அதிகாரப்பூர்வ வருமானச் சான்றிதழ்

ஆதார் கார்டு அல்லது அடையாளச் சான்று

நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான மதிப்பீட்டுச் செலவு அறிக்கை (Medical Estimate).

இக்கட்டுரையின் வாயிலாக, மிகக் கடுமையான நோய் பாதிப்புக்குள்ளான உங்கள் குடும்பத்தினருக்குப் பொருளாதாரச் சுமையின்றி, அரசு வழங்கும் முழுமையான மருத்துவப் பலன்களைத் தாமதமின்றிப் பெற்று, அவர்களின் உயிரைக் காப்பதற்கான தெளிவான வழிகாட்டுதலையும் மன அமைதியையும் நீங்கள் பெற முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com