Avalanche Vs Snowball: கடனை விரைவாக அடைக்கும் வழிமுறைகள்! 

 Tips To Pay Off Debt Fast
Avalanche Vs Snowball: Tips To Pay Off Debt Fast!
Published on

இன்றைய காலத்தில் கடன் வாங்கிதான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால், வாங்கிய கடனை அடைப்பது பலருக்கு சவாலானதாகவே இருக்கிறது. கடனை அடைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், இவற்றில் மிகவும் பிரபலமானவை Avalanche மற்றும் Snowball வழிமுறைகள். இவற்றைப் பின்பற்றி கடனை வேகமாக அடைக்கலாம் என சொல்லப்படுகிறது. இவை குறித்த முழு விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.‌ 

Avalanche முறை: இந்த முறையில் முதலில் அதிக வட்டி விகிதம் கொண்ட கடனை விரைவாக அடைத்து பின்னர் குறைந்த வட்டி விகிதம் கொண்ட கடன்களை அடைக்கும்படி சொல்லப்படுகிறது. இதன் மூலமாக நீண்ட கால அளவில் அதிக வட்டியை நாம் சேமிக்க முடியும். இதன் மூலமாக கடனை தீர்க்கும் வேகம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தொடக்கத்தில் அதிக பணத்தை செலுத்த வேண்டி இருக்கும் என்பதால், அதற்கான வருமானத்தையும் ஒருவர் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்த வட்டி விகிதம் கொண்ட கடன்களை அடைக்க நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், அவற்றின் வட்டி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

Snowball முறை: இந்த முறையானது முதலில் குறைந்த தொகை உள்ள கடனை நாம் அடைக்க வேண்டும் என சொல்கிறது. இதன் மூலமாக நாம் ஒரு கடனை அடைத்து விட்டோம் என்ற திருப்தி கிடைப்பதால், விரைவில் மற்ற கடன்களையும் அடைப்பதற்கான உத்வேகம் கிடைக்கும். இதன் மூலமாக சிறிய கடன்களை விரைவாக அடைக்க முடியும். ஆனால் நீண்ட காலத்திற்கு பெரும் தொகையுள்ள கடனுக்கான வட்டி செலுத்த வேண்டி இருக்கும். 

எது உங்களுக்கு ஏற்றது? 

மேலே குறிப்பிட்ட இரண்டு முறைகளில் எது உங்களுக்கு ஏற்றது என்பது உங்கள் நிதிநிலைமை, உங்கள் நோக்கங்கள் மற்றும் உங்கள் மனநிலையைப் பொறுத்தது. நீண்ட காலத்தில் அதிக அளவு வட்டியை சேமிக்க விரும்பினால் Avalanche முறையை தேர்வு செய்யவும். குறுகிய காலத்தில் பல கடன்களை முழுமையாக அடக்க விரும்பினால் Snowball முறையைப் பின்பற்றவும். 

இதையும் படியுங்கள்:
இனி அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் கிடைக்கும் ..!
 Tips To Pay Off Debt Fast

கடனை விரைவாக அடைக்க கூடுதல் வழிமுறைகள்:

உங்கள் வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கிட்டு ஒரு பட்ஜெட்டை தயாரித்து அதை முறையாகப் பின்பற்றுங்கள். பகுதி நேர வேலை செய்வது, பொருட்களை விற்பது போன்ற வழிகளில் கூடுதல் வருமானம் ஈட்ட முயற்சி செய்யவும். உங்களுக்கு தேவையற்ற செலவுகளைக் குறைத்து கடனை அடைப்பதற்கான பணத்தை ஒதுக்குங்கள். இவற்றை பின்பற்றுவதால் உங்களது கடனை விரைவாக அடைக்கலாம். 

Avalanche மற்றும் Snowball முறைகள் இரண்டும் கடனை அடைப்பதற்கு பயனுள்ள வழிமுறைகளாகும். எது உங்களுக்கு ஏற்றது என்பதை கவனமாக ஆராய்ந்து உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ற வழிமுறையை தேர்வு செய்யவும். இவற்றை முறையாகப் பின்பற்றி நீங்கள் செயல்பட்டாலே விரைவில் கடன்களை அடைத்து மகிழ்ச்சியாக வாழலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com