
வணிக நிதி (Business Finance) என்பது ஒரு வணிக நிறுவனத்தின் நிதி வளங்களையும், அதனுடைய செயல்பாடுகளை நிர்வகிப்பதை பற்றியும் குறிக்கும். ஒரு நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்கு அதன் நிதி வளங்களை நிர்வகிக்கும் செயல்முறை முக்கியம். இந்த வணிக நிதி பொருளாதார நடவடிக்கைகளை எளிதாக்கும். வணிகத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். இது ஒரு வணிகத்தின் வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் முக்கியமானதாகும்.
வணிகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சரியான திட்டமிடலும், முதலீடுகளும் அவசியமாகிறது. வணிகத்தின் நிதியை நிர்வகிப்பதற்கும், செலவுகளை கட்டுப்படுத்துவதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும் நிதி மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். இதில் வணிகத்தின் அன்றாட செயல்பாடுகளுக்கு தேவையான நிதியை கையாளவும், முதலீடு செய்யவும் நிதி மேலாண்மை என்பது அவசியமாகிறது. இதில் நிதியின் ஆதாரங்களான பங்கு வெளியிடுவது, பெறும் லாபத்தை மறு முதலீடு செய்வது, கடன் வாங்குவது போன்றவையும் அடங்கும்.
வணிக நிதிக்கான திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம். வணிகத்தின் எதிர்கால நிதி தேவைகளை திட்டமிடுவதும், இலக்குகளை நிர்ணயிப்பதும் போன்றவை மிக மிக முக்கியமானது. எந்த மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்வது வணிகத்தின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை ஆராய்வதும், எந்த வகையான முதலீடுகள் அதிக லாபத்தைத் தரும் என்றும் சிந்தித்து செயல்பட வேண்டியதும் அவசியம்.
வணிகத்தின் நிதி செயல்திறனை ஆய்வு செய்து, அதனுடைய பலம் மற்றும் பலவீனங்களை தெளிவாகக் கண்டறிந்து மேம்படுத்தும் வழியை அறிவதும் முக்கியம். வணிகத்தில் ஏற்படும் நிதி அபாயங்களை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை நிர்வகிப்பதும், வணிகத்தை நிதி நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்கவும் எந்தவிதமான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
வணிக நிதி என்பது வணிகத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் உதவும். லாபத்தை அதிகரிக்கவும், முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கும் உதவும். வணிகங்கள் நிதி ரீதியாக நிலையானதாக இருக்க வேண்டும். இதற்கு வணிக திட்டமிடல் நிலையான நிதியை உறுதி செய்ய உதவுகிறது. ஒரு வணிகத்திற்கு அதன் அன்றாட நடவடிக்கைகளை பராமரிக்க செயல்பாட்டு மூலதனம் தேவை. எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் வணிக நிதி முக்கிய பங்கு வகிக்கிறது. இது நிறுவனங்கள் வளங்களை திறம்பட ஒதுக்கவும், தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கும், அபாயங்களை நிர்வகிப்பதற்கும் உதவுகிறது.