வியாபார யுக்தி தருமே வெற்றி! எப்படி?

Business
Business
Published on

(பல வருடங்களுக்கு முன் நடைப் பெற்ற நிகழ்வின் அடிப்படையில் எழுதப் பட்டது இப்பதிவு)

அவர் பருத்தி நூல் கொண்டு தயார் செய்யப் பட்ட துணிகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடு பட்டு வந்தார்.

அந்த கால கட்டத்தில் நமது நாட்டில் பெரும்பாலானோர் வெள்ளை நிற அரை கை சட்டைகளை உபயோகித்தும், சிலர் முழுக்கை சட்டை அணிந்தும் வந்தனர். இவர் புதுமை புகுத்த விரும்பி சில வண்ணங்களில் துணிகள் தயாரித்து அமெரிக்க நாட்டிற்கு ஏற்றுமதி செய்தார். இவரது முதல் பண்டில் (bundle) வண்ண சட்டை துணிகள் அயல் நாட்டிற்கு கப்பலில் பயணம் செய்தன. அதற்கு உரிய பணம் வந்ததும், மேலும் தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வியாபரத்தை பெருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவரின் எண்ணத்தில் இடி போல செய்தி வந்தது. இவர் அனுப்பிய துணி சாயம் போவதால் ஆர்டர் ரீஜெக்ட் செய்யப் பட்டுள்ளதாக... இவருக்கு என்ன செய்வது என்று புலப் படவில்லை. குழம்பி போய்விட்டார்.

வெட்ட வெளியில் கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு வானத்தை பார்த்தார். இரவில் நட்சத்திரங்கள் சிமிட்டிக் கொண்டு இருந்தன. அழுத்தம். மன உளைச்சல். எப்படி பிரச்சனையை சமாளிக்கப் போகிறோம் என்ற ஏக்கம். தவித்துப் போய் விட்டார். அசதியில் உறங்கி விட்டார். விடி காலையில் திடீரென்று கண்கள் விழித்தார். பளிச்சென்று ஒரு யோசனை உதித்தது.

உடனே தாமதிக்காமல் அந்த யோசனையை சோதித்து செயல் படுத்த தொடங்கினார். தொடர்ந்தார் போல் நான்கு நாட்கள் சோதித்தார்.

ஒவ்வொரு முறையும் நீரில் நனைத்து காய வைத்த துணியின் நிறம் வேறு வேறு வண்ணமாக காட்சி அளித்தது. பச்சை வண்ணம் நீல நிறமாக மாறியது. அதே துணியை மறுபடியும் நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்துப் பார்த்தால் ஊதா நிறமாக தோன்றியது. இந்த சோதனை அளித்த ரிசல்ட் அவருக்கு துணிவை கொடுத்தது. தைரியத்துடன் மறுபடியும் அதே வியாபாரத்தில் இறங்கினார்.

இதையும் படியுங்கள்:
ரெக்கரிங் டெபாசிட் vs பிக்சட் டெபாசிட்: எதில் முதலீடு செய்தால் அதிக இலாபம்?
Business

இந்த முறை அவர் தயாரித்த துணி வகைகளை மேற்கு இந்திய தீவுகளுக்கு ஏற்றுமதி செய்தார். கவர்ச்சிகரமான பெயரில் (attractive name) முக்கியமான குறிப்பும் தெளிவாக அனுப்பினார். இந்த துணி நீரில் வாஷ் செய்தால் கட்டாயம் சாயம் போகும். ஒவ்வொரு முறை வாஷ் செய்யும் போதும் வண்ணம் மாறும்.

அங்கு சென்றதும் இந்த வகை துணி அவர்களை மிகவும் கவர்ந்தது. டிமாண்டும் அதிகரிக்க இவர் அந்த பிசினசில் நல்ல லாபம் சம்பாதித்தார்.

வியாபாரம் என்பது எதிர் பார்த்தபடி நடைப் பெறாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கும். வியாபாரம் தோல்வியை சந்திக்கும் பொழுது, அத்தகையை தோல்வியை எப்படி வெற்றி பெறும் பாதையில் செல்ல மாற்ற வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். புதுமை (innovative ideas) புகுத்த வேண்டும். விளம்பரம் கவர்ச்சிகரமாக, பொருட்கள் உபயோகிப்பவர்களை கவரும் வண்ணம் இருக்க வேண்டும்.

உண்மையை மறைக்காமல் (without concealing the true facts) முன் கூட்டியே விவரமாக தெரிவிப்பது வியாபாரம் வெற்றி பெற மிகவும் உதவும். துணிவுடன் செயல் பட தயங்க கூடாது.

அனுபவம் கற்று தரும் பாடம் தனி பட்ட வகையில் மனதில் பதிய வைத்து விரு விரு, சுரு சுருப்புடன் செயல் பட தூண்டும். வெற்றி பெறவும் வழி வகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com