இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற கோவை தொழிலதிபர் யார்?

kovai industrialist k srinivas
kovai industrialist k srinivas
க.இப்ராகிம்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் கே.பி.ராமசாமி இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல நிறுவனமான ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரிலையன்ஸ் குடும்பத்தினுடைய தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பெரும்பான்மையானோர் மும்பை நகரத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் கோயமுத்தூரில் மிகப்பெரிய ஜவுளி மில் நடத்தி வரும் கே.பி.ராமசாமி இடம்பெற்றுள்ளார்.

எளிய குடும்ப பின்னணி கொண்ட கே.பி ராமசாமி தன்னுடைய கடின உழைப்பின் காரணமாக 1984இல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜவுளி மில்லை தொடங்கினார். தற்போது அவரது நிறுவனத்தில் பல்வேறு வகையான ஜவுளி ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு இவர் ஏற்றுமதி செய்கிறார். மேலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கே.பி.ஆர் மில்லின் ஜவுளி ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு சிறுக சிறுக உயர்ந்து தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி இருக்கிறார் கே பி ராமசாமி. மேலும் இவருடைய கே.பி.ஆர் மில்லில் பணியாற்றுபவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் நடத்திய 2013 ஆம் ஆண்டிற்கான இந்தியாவைச் சேர்ந்த டாப் 100 கோடீஸ்வரர் பட்டியலில் கே.பி.ஆர் மில் உரிமையாளர் கே.பி.ராமசாமி இடம்பெற்றிருக்கிறார். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 2.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே தொழிலதிபர் இவர் ஆவார்.

இவர் ஜவுளி தொழில் மட்டுமல்லாது 2013ஆம் ஆண்டு சர்க்கரை உற்பத்தி, 2019 ஆம் ஆண்டு ஆண், பெண் இரு பாலருக்கான உள்ளாடை உற்பத்தியிலும் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்து தன்னுடைய நிறுவனத்தை விரிவுபடுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.