KalkiOnline - மென்பேனா!

அன்புடையீர்,
மென்பேனா வழியாக உங்கள் படைப்புகளை பதிவு செய்ய அழைக்கிறோம்!

நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:

  1. ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கட்டுரைகள், கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
  2. கட்டுரை குறைந்தது 350 வார்த்தைகள் அதிகபட்சம் 800 வார்த்தைகள் இருக்க வேண்டும். சிறுகதைகள் 1200 வார்த்தைகள் வரை இருக்கலாம்.
  3. உங்களுடைய பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் அனைத்தையும் கட்டாயம் பகிரவேண்டும்.
  4. தங்கள் படைப்பு பிரசுரம் ஆனால் உங்களுக்கு என்று ஒரு Author Profile உருவாக்கப்படும். இதற்கு தங்களைப் பற்றிய சிறு குறிப்பு (50 வார்த்தைகள்) மற்றும் புகைப்படம் இணைத்து அனுப்பவும்.
  5. அனைத்து உள்ளடக்கங்களும் இரு முறை சரிபார்த்த (எழுத்துப்பிழை, உண்மை சரிபார்ப்பு) பின்புதான் பதிவிட வேண்டும்.
  6. நீங்கள் எங்கிருந்து இந்த உள்ளடக்கத்தின் கருவைத் தேர்ந்தெடுத்தீர்கள், எந்தெந்த வலைத்தளங்களில் இருந்து குறிப்பு எடுத்தீர்கள் என்பதைப் பகிரவேண்டும். ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரக் கட்டுரைகளுக்கு மிக மிக முக்கியம்.
  7. AI உபயோகிப்பது, ஆங்கில உள்ளடக்கத்தை Translate செய்வது, மற்ற செய்தி அல்லது நாளிதழ்களில் இருந்து உள்ளடக்கத்தை நகலெடுத்தது போன்ற செயல்கள் செய்து கண்டுபிடிக்கப்பட்டால் உடனே உங்களது அனைத்து உள்ளடக்கமும் நிறுத்தப்பட்டு நீங்கள் Block செய்யப்படுவீர்கள்.
  8. சொந்தப் படைப்பு என்பதற்கான உறுதிமொழி அவசியம் இணைக்கவும்.
  9. தாங்கள் அனுப்பும் அனைத்து படைப்புகளும் பிரசுரமாகும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.
  10. பிரசுரத்துக்கான கால அவகாசம் குறித்த உத்திரவாதமும் இல்லை. தகுதியுடைய, சுவாரசியமான கட்டுரைகள் மட்டுமே நமது கல்கி இணையதளத்தில் வெளியிடப்படும்.
  11. எந்தப் பகுதிக்குக் கட்டுரையை அனுப்புகிறீர்கள் என்பதை தலைப்பில் குறிப்பிட வேண்டும்.
  12. தங்களுடைய படைப்பின் பிரசுர விவரம் இணையதளத்தை பின்பற்றுவதன் மூலம் தாங்கள் அறியலாம்.
  13. தாங்கள் அனுப்பி வைக்கும் படைப்புகளுக்குச் சன்மானம் அளிக்கப்பட்ட மாட்டாது.
  14. அனைத்து முடிவுகளும் ஆசிரியர் குழுவின் தீர்வுக்கு உட்பட்டது.
  15. சிறுகதைகளாக இருப்பினும் மேற்கண்ட தகவல்கள் பொருந்தும்.

உங்கள் படைப்பை இங்கே சமர்ப்பிக்கவும்