எதிர்காலத் தேவைக்கு தன் விருத்தி LIC பாலிசி: சிறப்பம்சங்கள் இதோ!

LIC
LIC
Published on

எதிர்கால பணத் தேவையைப் பூர்த்தி செய்ய அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் எல்ஐசி முதலீடுகளை மக்கள் அதிகமாக விருபம்புகின்றனர். இதில் மத்திய அரசால் இயங்கும் எல்ஐசி நம்பகத்தன்மை வாய்ந்தவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் நடப்பாண்டில் எல்ஐசி அறிமுகப்படுத்திய தன் விருத்தி (Dhan Vridhhi) பாலிசியைப் பற்றித் தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்தியாவில் சேமிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவ்வப்போது பல்வேறு திட்டங்களை எல்ஐசி (LIC) நடைமுறைப்படுத்துகிறது. ஓய்வு காலத்தில் நமக்கு வருமானம் இருக்காது. ஆனால், செலவுகள் நிச்சயமாக இருக்கும். ஆகையால் தான் பலரும் வருங்காலத் தேவைக்காக இப்போதே முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள். அதற்கு உதவும் வகையில், மக்களிடையே மிகவும் பிரபலமான எல்ஐசி பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் ஒன்று தான் தன் விருத்தி எல்ஐசி பாலிசி.

தன் விருத்தி எல்ஐசி பாலிசி:

ஒரே ஒரு முறை மட்டுமே பிரீமியம் தொகை செலுத்தினாலே தன் விருத்தி எல்ஐசி திட்டத்தில் பயனாளராகி விடலாம். எதிர்கால சேமிப்புக்கும் இத்திட்டம் வழிவகுக்கிறது. இத்திட்டம் முதிர்வு நேரத்தில் காப்பீட்டாளருக்கு உத்தரவாதமாக மொத்தத் தொகையையும் அளிக்கிறது.

எல்ஐசி தன் விருத்தி பாலிசி 10, 15 மற்றும் 18 ஆண்டுகள் என மூன்று விதமான முதிர்வு காலத்திற்கு கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்படும் முதிர்வு காலத்தைப் பொறுத்து வயது மாறுபடும். குறைந்தபட்ச வயது 90 நாட்கள் முதல் 8 வயது வரையிலும், அதிகபட்ச வயது 32 வயது முதல் 60 வயது வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குறைந்தபட்ச அடிப்படைத் தொகையானது ரூ.1,25,000. அதிகபட்சமாக காப்பீட்டாளர்கள் 5,000 இன் மடங்குகளில் அதிக தொகையைத் தேர்வு செய்யலாம்.

இத்திட்டத்தில் இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன. பாலிசிதாரர் எதிர்பாராமல் உயிரிழக்கும் போது கிடைக்கும் உத்தரவாதத் தொகை 1.25 மடங்கு மற்றும் 10 மடங்கு குறிப்பிட்ட அடிப்படைத் தொகைக்கான பிரீமியம் ஆகிய இரண்டில் ஒன்றை பாலிசிதாரரே தேர்வு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!
LIC

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் திட்டத்தின் படி, அடிப்படைத் தொகை மற்றும் முதிர்வு காலத்திற்கு ஏற்ப உத்தரவாதத் தொகை சேர்ந்து கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு ரூ.1,000 அடிப்படைத் தொகைக்கு ஆண்டிற்கு குறைந்தபட்சமாக ரூ.25 முதல் ரூ.40 வரையிலும், அதிகபட்சமாக ரூ.60 முதல் ரூ.75 வரையிலும் இருக்கும்.

ரைடர் தேர்வு:

காப்பீட்டாளர்கள் இத்திட்டத்தில் புதிய டேர்ம் அஷ்யூரன்ஸ் ரைடரைத் தேர்வு செய்தால் கூடுதலாக சில பலன்கள் கிடைக்கும். இதன் மூலம், மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடந்தோறும் ப்ரீமியம் செலுத்தும் வசதியும் இருக்கிறது. மேலும் அவசரத் தேவைக்கு கடன் பெறும் வசதியும் உண்டு.

எப்படித் தொடங்கலாம்:

எல்ஐசி முகவரின் மூலம் ஆஃப்லைனில் எல்ஐசி தன் விருத்தி திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்‌. பாயின்ட் ஆஃப் சேல்ஸ் - பர்சன்ஸ்-லைஃப் இன்சூரன்ஸ் (POSP-LI), பொதுவான பொதுச் சேவை மையங்கள் (CPSC-SPV) மற்றும் www.licindia.in என்ற இணையதளத்தின் மூலமும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com