Life Insurance Scheme
Life Insurance SchemeImg. credit: pixabay

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

Published on

அஞ்சல் அலுவலகத்தில் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தான் பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம். இத்திட்டத்தின் பலன்கள், யார் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் எப்படி முதலீடு செய்வது என்பது பற்றிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

நம் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு அவர்களுடைய சிறு வயது முதலே நாம் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் . அவர்களின் கல்வி செலவு மற்றும் திருமணச் செலவுகளுக்கு இந்த முதலீடு பயனுள்ளதாக அமையும். சேமிப்புத் திட்டங்களில் மிகவும் பாதுகாப்பானதாக அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் உள்ளன. பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றவை. அவ்வகையில், குழந்தைகளுக்காக பால் ஜீவன் பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஒன்றையும் அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது. இத்திட்டம் பற்றிய முழு விவரங்களையும் இப்போது அறிந்து கொள்ளலாம்.

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம்:

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் தினந்தோறும் குறைந்தபட்சம் 6 ரூபாய் முதல் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். எதிர்பாராத விதமாக உங்களின் குழந்தை இறந்து போனால், 1 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.

வயது வரம்பு:

குழந்தையின் பாதுகாவலர் அல்லது பெற்றோர் என யார் வேண்டுமென்றாலும் அருகில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 8 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளின் பெயரில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். குழந்தையின் 18 வயது வரை தான் நீங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். 18 வயது நிறைவடைந்த பிறகு, எதிர்பாராத விதமாக உங்கள் குழந்தை உயிரிழக்க நேரிட்டால், இத்திட்டம் செல்லுபடி ஆகாது.

இதையும் படியுங்கள்:
மாதாந்திர வருவானம் கிடைக்கும் அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்!
Life Insurance Scheme

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (Postal Life Insurance) மற்றும் ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (Rural Postal Life Insurance) என்று இரு தனித்தனி திட்டங்கள் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களின்படி காப்பீட்டுத் தொகை அளிக்கப்படுகிறது. போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின்படி நீங்கள் 3 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை பெறலாம். 20 வயதிற்கு மேல் எவ்வித பாதிப்பும் இன்றி உங்கள் குழந்தை நலமுடன் இருந்தால், ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின்படி நீங்கள் பாலிசி எடுத்திருந்தால், உங்களுடைய முதலீட்டுத் தொகையில் 1,000 ரூபாய்க்கு ஆண்டிற்கு 48 ரூபாய் போனஸாக அளிக்கப்படும். ஒருவேளை நீங்கள் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின்படி பாலிசி எடுத்திருந்தால், உங்களுடைய முதலீட்டுத் தொகையில் 1,000 ரூபாய்க்கு ஆண்டிற்கு 52 ரூபாய் போனஸாக அளிக்கப்படும். முதிர்வு காலத்தின் போது இந்தத் தொகையை நீங்கள் மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com