கல்லைக்கூட காசாக்க முடியும் தெரியுமா?

ஆறே மாதங்களில் 4 மில்லியன் டாலர் சம்பாதித்த கல்!
Pet Rock
Pet Rock
Published on

உலகத்தில் இப்படியெல்லாம் கூட நடந்திருக்கிறதா? என்று நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் பல உண்டு. அதில் ஒன்று தான் ஒரு நபர் வெறும் கல்லை மட்டும் விற்று ஆறே மாதங்களில் 4 மில்லியன் டாலர் சம்பாதித்த அதிசய கதை. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

Gary dahl என்பவர் கலிபோர்னியாவை சேர்ந்த Advertising executive ஆவார். 1975 ல் ஒருநாள் அவர் நண்பர்களுடன் வெளியே சென்றிருக்கிறார். இரவு ஆனதும் நண்பர்கள் அனைவரும் வீட்டுக்கு போக வேண்டும். வீட்டிற்கு போய் என் செல்லப்பிராணியை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 'செல்லப்பிராணிகளை பார்த்துக் கொள்வதற்கும் கஷ்டமாக இருக்கிறது. அவற்றிற்காக நிறைய காசும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது' என்று புலம்பியிருக்கிறார்கள்.

இதைக்கேட்ட Gary dahl, 'இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் செல்லப்பிராணி வாங்கி வளர்க்கிறீர்கள். அதற்கு பதில் ஒரு கல்லை வாங்கி வளர்க்கலாமே?' என்று விளையாட்டாக கேட்டிருக்கிறார். அவருடைய நண்பர்களும் சிரித்துக் கொண்டே அப்படிக்கூட பண்ணலாம். எந்த பிரச்னையும் இருக்காது என்று கூறியிருக்கிறார்கள். இதை Gary dahl கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டார்.

பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்று நான்கு, ஐந்து கற்களை எடுத்து வந்து பாக்ஸ் செய்து அதில் வைத்திருக்கிறார். அந்த பாக்ஸில் மேலே ஓட்டைகள் இருந்தன. அது எதற்கு என்று கேட்டால் கற்கள் மூச்சு விடுவதற்காகவாம். அந்த பெட்டியை எடுத்துச் சென்று பக்கத்தில் இருக்கும் கடையில் 'பெட் ராக்' என்று சொல்லி விற்க ஆரம்பிக்கிறார். ஆச்சர்யப்படும் விதமாக ஒரு மணி நேரத்திலேயே எல்லா பெட் ராக்கும் விற்பனையாகிவிடுகிறது. இன்னும் நிறைய பேர் எங்களுக்கும் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

இதனால் Gary dahl மெக்ஸிக்கோவில் இருந்து கற்களை இறக்குமதி செய்து அதை ஒரு பெட்டிக்குள் வைத்து 1 பெட்டி 4 டாலர் என்று விற்க ஆரம்பிக்கிறார். மக்களுக்கு இது வேடிக்கையாக இருந்திருக்கிறது. அதனால் நிறைய பேர் வாங்க ஆரம்பிக்கிறார்கள். ஆறு மாதத்தில் 1.5 மில்லியன் மக்கள் இதை வாங்கியிருக்கிறார்கள். அதிலிருந்து Gary dhal க்கு நான்கு மில்லியன் டாலர் லாபம் வந்திருக்கிறது. போக போக இதன் மவுசு குறைந்துவிட்டது. 

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital marketing): பணம் கொட்டும் தொழில் ரகசியம்! மாதம் பல ஆயிரம் சம்பாதிப்பது எப்படி?
Pet Rock

சாதாரணமாக கீழே கிடக்கும் ஒரு கல்லை கூட ஒருவர் விற்பனை செய்துள்ளார். அதையும் இத்தனை பேர் வாங்கியிருக்கிறார்கள் என்பதை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? Branding And marketing சரியாக செய்தால் கீழே கிடக்கும் கல்லைக் கூட மக்கள் காசு கொடுத்து வாங்குவார்கள் என்பதற்கு இது சரியான உதாரணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com