இந்தியாவில் தர கட்டுப்பாடுகள் இத்தனையா? இருந்துமா இப்படி?

Indian Business
Indian Business

இந்தியா, உற்பத்தி திறன்கள் நிறைந்த, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகளுக்கான ஆதார இடமாகும். அதனால் தரக் கட்டுப்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல்வேறு துறைகள் மற்றும் தொழில்கள் அவற்றின் உயர் தரத்தை பராமரிக்க கடுமையான சோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதை பற்றி தெரிந்து கொள்வோம்

1. ஜவுளி மற்றும் ஆடை தொழில்

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது பரந்த அளவிலான துணிகள், ஆடைகள் மற்றும் அணிகலன்களை உற்பத்தி செய்கிறது. இதன் தர சோதனைகள் பொதுவாக துணி கலவை, நிறத்திறன், தையல் மற்றும் ஆடையின் தோற்றம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. HQTS போன்ற மூன்றாம் தரப்பு ஆய்வு முகமைகள், தொழிற்சாலை தணிக்கைகள் (factory audits), தயாரிப்புக்கு முந்தைய ஆய்வுகள் (pre-shipment inspections) மற்றும் உலகளாவிய தரங்களுக்கு இணையாக ஆய்வு செய்வார்கள்.

2. விவசாயம் மற்றும் உணவுப் பொருட்கள்

இந்தியாவின் விவசாய உற்பத்தியில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை அடங்கும். அதில் பூச்சிக்கொல்லி எச்சங்கள், சுகாதாரம், பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் ஆகியவற்றில் தரக் கட்டுப்பாடு வாரியங்கள் கவனம் செலுத்துகிறது. FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்) போன்ற சான்றிதழ்கள் உணவுப் பாதுகாப்பைப் பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

3. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொருட்கள் (Renewable Energy Products)

தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதில் சோலார் பேனல்கள், காற்றாலைகள் மற்றும் பேட்டரிகள் தர மதிப்பீடுகளுக்கு உட்படுகின்றன. அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் ஆயுள், செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு (technical specifications) ஏற்ப தயாரிக்கப்படுகிறதா போன்ற அம்சங்கள் ஆய்வு செய்யப்படும்.

4. பிற தொழில்கள்

தர சோதனைகள் இரசாயனங்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பல துறைகளுக்கு நீட்டிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் குறிப்பிட்ட தேவைகள் உள்ளன. அதற்கேற்ற சோதனைகளை செய்து சான்று அளிப்பதற்கு SGS, Intertek மற்றும் TÜV Rheinland போன்ற மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

5. மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள்

இந்தியா ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிற மருந்துகளின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது. எனவே மருந்துகள் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் அதன் தூய்மைத் தரங்களை சந்திக்கிறதா என்பதை தரக் கட்டுப்பாடு உறுதி செய்கிறது. இதை மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organization (CDSCO) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் மேற்பார்வையிடுகின்றன.

இதையும் படியுங்கள்:
தங்கக் கடன்: ஒரு விரிவான கண்ணோட்டம்! 
Indian Business

6. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு

கட்டுமானத்தில் தர சோதனைகளில் (கான்கிரீட், எஃகு(steel), முதலியன), போன்ற பொருட்கள், கட்டமைப்பு ஒருமைப்பாடு (structural integrity), பாதுகாப்பு நெறிமுறைகள் (safety protocols) மற்றும் கட்டிடக் குறியீடுகளைப் (building codes) பின்பற்றுதல் ஆகியவை அடங்கும். Bureau of Indian Standards (BIS) தான் தயாரிப்பு தரத்தை சரிபார்க்கிறது.

7. நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள்

ஸ்மார்ட்போன்கள் முதல் குளிர்சாதன பெட்டிகள் வரை, நுகர்வோருக்குக்கான மின்னணு சாதனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுகிறது. அவற்றின் செயல்திறன், ஆயுள், பாதுகாப்பு மற்றும் மின்காந்த இணக்கத்தன்மை (EMC) போன்ற சோதனைகள் இதில் அடங்கும். இதில் பொருட்களின் மின் அளவை கணக்கிட Bureau of Energy Efficiency (BEE) என்ற குழுமம் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த (BEE) திட்டத்தில் தற்போது குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள், தொலைக்காட்சிகள், கீசர்கள் (Geysers), tubelights ஆகியவற்றின் மின் அளவுகள் சோதனை செய்யப்படுகின்றன.

8. சுற்றுச்சூழல் இணக்கம்

தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், காற்று வெளியேற்றம் மற்றும் கழிவுகளை அகற்றும் நடைமுறைகள் கண்காணிக்கப்படுகின்றன.

9. கல்வி மற்றும் அங்கீகாரம்

தர உத்தரவாதம் கல்வி நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தேசிய அங்கீகார வாரியம் (NBA) போன்ற அங்கீகார அமைப்புகள் பொறியியல் கல்லூரிகளை மதிப்பிடுகின்றன. இதன் மூலம் தரமான கல்வி உறுதி செய்யப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com