தங்கக் கடன்: ஒரு விரிவான கண்ணோட்டம்! 

Gold Loan
தங்கக் கடன்
Published on

பொருளாதார நெருக்கடியின்போது தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. அதன் மதிப்பு காலப்போக்கில் நிலையாக இருப்பதால் தங்கம் உங்கள் சொத்துக்களை பாதுகாக்க உதவும். தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெறும் முறையானது தங்கக் கடன் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பதிவில் தங்கக் கடன்கள் எவ்வாறு செயல்படுகின்றன அவற்றை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

தங்கக் கடன் எவ்வாறு செயல்படுகிறது? 

தங்க கடனை பெற உங்கள் நகைகளை ஒரு வங்கி அல்லது நகைக் கடையில் அடகு வைக்க வேண்டும். கடனின் மதிப்பு, அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் எடை மற்றும் தூய்மையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். அதற்கான வட்டி விகிதங்கள் வங்கி அல்லது நகைக்கடையைப் பொறுத்து மாறுபடும். 

தங்கக் கடனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்: 

நீங்கள் புதிய வணிகத்தை தொடங்கப் போகிறீர்கள் என்றால் அதற்கு தேவையான மூலதனத்தை தங்கக் கடன் வழங்குகிறது. உங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணம் போன்ற உயர்கல்வி செலவுகளை சமாளிக்க தாங்க கடன் பேருதவியாக இருக்கும். 

எதிர்பாராத திடீர் மருத்துவச் செலவுகளை சமாளிக்க தங்கக்குடன் ஒரு எளிதான வழி. அதிக வட்டி விகிதம் உள்ள கடன்களை அடைக்க தங்கக் கடனை பயன்படுத்தலாம். திருமணம், விடுமுறை போன்ற தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தங்கக் கடனை பயன்படுத்தலாம்.‌ 

தங்கக் கடனின் நன்மைகள்: 

தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது மிகவும் எளிது. இதற்கு குறைந்த ஆவணங்கள் அல்லது நம்பிக்கை இருந்தால் போதும் ஒருவரது அவசரகால நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். தங்கக் கடன்களுக்கு வட்டி விகிதம் பொதுவாக மிகவும் குறைவு. கடன் தொகை மற்றும் கடன் திரும்ப செலுத்தும் காலத்தை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்ய முடியும். தங்கக் கடனில் நீங்கள் செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம். 

இதையும் படியுங்கள்:
தங்க பத்திரம் என்றால் என்ன? அதனை வாங்க மத்திய அரசு ஏன் அழைப்புவிடுத்துள்ளது?
Gold Loan

தங்கக் கடனின் தீமைகள்: 

ஒருவேளை உங்களால் கடனை திருப்பி செலுத்த முடியாவிட்டால் நீங்கள் அடகு வைத்த தங்க நகைகளை இழக்க நேரிடும். வட்டி விகிதங்கள் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். 

தங்கக் கடன் என்பது பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பயனுள்ள நிதிக் கருவியாகும். தங்கக் கடன் பெறுவதற்கு முன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு கடன் தொகை மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை கவனமாக தேர்வு செய்யவும். அதேநேரம் தேவையில்லாமல் தங்கக் கடன் பெற்று அவற்றை செலவழிக்காதீர்கள். அவசர காலத்திற்காக மட்டுமே கடன் வாங்குவது சரியானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com