வேலையிழப்பு காலத்தில் நிதிச்சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி தெரியுமா?

Layoff
Layoff
Published on

தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் பட்சத்தில், அடுத்து வரும் நிதிச் செலவுகளை சமாளிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இம்மாதிரியான நேரங்களில் நமது நிதித் தேவைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறது இந்தப் பதிவு.

கல்லூரி படிப்பை முடித்தவுடன் பலரது இலக்கும் ஏதாவது ஒரு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது தான். இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைத்தாலும் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. அரசு வேலைக்கு முயற்சி செய்து, அதனைப் பெற்று விட்டால் எந்தக் கவலையும் இருக்காது. ஏனெனில் அரசாங்க வேலையில் நமது வேலைக்கான பாதுகாப்பு உறுதியாக இருக்கும். தனியார் துறை வேலையில் எப்போது வேலையை விட்டு நிறுத்துவார்கள் என்று கூட சொல்ல முடியாது. அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, பல தனியார் நிறுவனங்கள் வேலையிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இதனால் மாதச் சம்பளத்தை நம்பியிருக்கும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வேலையிழப்பைச் சந்தித்தால், வருந்துவதை தவிர்த்து விட்டு அதிலிருந்து மீண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொதுவாக நமது சம்பளத்தின் பெரும்பகுதி அத்தியாவசியத் தேவைக்காகவே செலவாகி விடும். மீதமிருக்கும் பணத்தில் தான் சேமிப்பு மற்றும் பொழுதுபோக்கு செலவுகளைச் செய்வோம். வேலையிழப்பு காலத்தில் நிதிச் சிக்கலை சமாளிக்க, சேமிப்பு மற்றும் பொழுதுபோக்கு செலவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

தற்சமயம் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதையும், அதனை பயனுள்ள முறையில் அடுத்த வேலை கிடைக்கும் வரை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் தேவையற்ற வீண் செலவுகளை அறவே தவிர்த்து விட வேண்டும். உதாரணத்திற்கு வெளியில் சென்று சாப்பிடுவது, தேவையின்றி பயணம் மேற்கொள்வது மற்றும் சந்தா செலுத்துவது போன்றவற்றை சிறிது காலத்திற்கு தவிர்க்கலாம்.

வரும் நாட்களில் உங்களுக்கு என்னென்ன செலவுகள் இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப பகுதி நேர வேலைகளுக்குச் செல்லலாம். முடிந்த வரையில் அடுத்த வேலையை விரைவாக பெற முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் நாளுக்கு நாள் நிதி நெருக்கடி அதிகமாகி விடும். மேலும், வேலையிழப்பு நாட்களில் புதிதாக பட்ஜெட் போட்டு முடிந்த வரையில் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
வைப்பு நிதி முதலீட்டில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவது சரியா?
Layoff

மாதந்தோறும் முதலீடு செய்யும் ரெக்கரிங் டெபாசிட் மற்றும் எஸ்ஐபி போன்ற முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். வேலை கிடைத்த பிறகு, இதற்கான வட்டியை செலுத்தி தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

தேவைக்கேற்ப சிறிய அளவில் கடன் வாங்கியும் நிதிச் செலவுகளை சமாளிக்கலாம். இருப்பினும் வட்டி குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதோடு, அதிக பணத்தை கடனாக வாங்கி மாட்டிக் கொள்ளக் கூடாது. தங்க நகைகளுக்கு குறைவான வட்டியில் கடன் கிடைக்கும் என்பதால், இவ்வழியைப் பின்பற்றி கடன் வாங்குவது சிறப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com