பாவ வரி (Sin Tax) என்றால் என்ன தெரியுமா? 

Sin Tax
Sin Tax
Published on

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் விதிக்கப்படும் வரி வகைகள் “பாவ வரி (Sin Tax)” என்று அழைக்கப்படுகிறது. புகையிலை, மதுபானங்கள், சர்க்கரை பானங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த வரி பொதுவாக விதிக்கப்படுகிறது. இந்தப் பதிவில் பாவ வரி குறித்த முக்கிய தகவல்களை விரிவாகப் பார்க்கலாம். 

பாவ வரி என்பது சமீபத்தில் உருவான ஒன்றல்ல. 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மதுபானங்கள் மீது வரி விதிக்கப்பட்டது. இது பொது ஒழுங்கை மேம்படுத்தவும், குற்றங்களைக் குறைக்கவும் உதவும் என நம்பப்பட்டது. இதைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் புகையிலைக்கு வரி விதிக்கப்பட்ட நிகழ்வு ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது.  

இந்தியாவில் பாவ வரி: இந்தியாவில் பாவ வரி 1947 இல் சுதந்திரத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இது முதன்மையாக வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகவும் இது பயன்படுத்தப்படத் தொடங்கியது. 

பாவ வரி விதிக்கப்படும் பொருட்கள்: 

  • புகையிலை: பீடி, சிகரெட், புகையிலை போன்ற புகையிலைப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.

  • மதுபானங்கள்: ஆல்கஹால் இருக்கும் எல்லா மதுபானங்களுக்கும் பாவ வரி விதிக்கப்படுகிறது. 

  • சர்க்கரை பானங்கள்: குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் போன்ற சர்க்கரை பாகனங்களுக்கு சமீபத்திய ஆண்டுகளில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. 

  • சூதாட்டம்: சில இந்திய மாநிலங்களில் சூதாட்டங்களுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்படுகிறது. 

பாவ வரியின் நன்மைகள்: பாவ வரியின் விலை உயர்வு காரணமாக புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் சர்க்கரை பானங்களை அதிகம் குடிப்பது குறைகிறது. இது பல்வேறு நோய்களின் அபாயத்தை குறைக்க வழிவகுக்கும். பாவ வரி அரசாங்கத்திற்கு கணிசமான வருவாயை ஈட்டித் தருவதால், சுகாதாரம், கல்வி மற்றும் பிற பொது சேவைகளுக்கு நிதியளிக்க அவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், தீங்கு விளைவிக்கும் நடத்தைகளின் சமூக செலவுகளைத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
80C வருமான வரி விலக்கு எந்தெந்த முதலீடுகளுக்கு இந்த வரிவிலக்கு உண்டு?
Sin Tax

பாவ வரியின் தீமைகள்: அதிக வரி விகிதங்கள், கடத்தல் மற்றும் போலி பொருட்களின் வர்த்தகத்தை ஊக்குவித்து, பொது சுகாதாரத்திற்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். சிலர் தனிநபர்களின் விருப்பத்தில் அரசு தலையிட்டு அவர்களின் சுதந்திரத்தை கெடுப்பதாக சொல்கின்றனர். ஏழை நடுத்தர மக்களே இத்தகைய விஷயங்களை அதிகம் பயன்படுத்துவதால், அவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. 

இந்தியாவில் பாவ வரி ஒரு முக்கியமான கருவியாக பார்க்கப்படுகிறது. சிலர், பொது சுகாதாரத்தை மேம்படுத்த இது உதவும் எனக் கூறினாலும், அரசின் வருவாயை அதிகரிக்கவே இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பாவ வரியை ஒரு சிக்கலான பிரச்சினையாகவே பார்க்க வேண்டும். அதற்கு நன்மைகள் தீமைகள் என இரண்டும் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com