கார் வாங்க எந்தக் கடன் சிறந்தது தெரியுமா?

Car Loan
Car Loan

போக்குவரத்து வசதிகள் பலமடங்கு மேம்படுத்தப்பட்டுள்ள இன்றைய காலத்தில், பைக் மற்றும் கார்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. கடன் வாங்கி பலரும் கார் வாங்கும் நிலையில், இதற்கு எந்தக் கடன் சிறந்தது என்பதை தெரிந்துகொள்வோம். 

அதிவேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் நாமும் அதற்கேற்ற வேகத்தில் ஓட வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் இருப்பதே அரிதாக இருந்தது. ஆனால் இன்று, ஒரு வீட்டிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. அதோடு கார்களின் வருகை இன்றைய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் தவணை முறையில் கார்களை வாங்கும் வசதி இருப்பதால் ஆண்டுதோறும் விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கார் வாங்க வங்கியில் தரப்படும் எந்தக் கடன் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

அனைத்து வங்கிகளிலும் குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வெவ்வேறு பெயர்களில் கடன் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் கார் வாங்க தனிநபர் கடன் மற்றும் வாகன கடனைத் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இவையிரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறது அல்லவா! நியாயமான கேள்வி தான். இருப்பினும் இந்த இரண்டு கடன்களையும் பற்றித் தெரிந்தால் தான் நம்மால் ஒரு நிலையான முடிவுக்கு வர முடியும்.

தனிநபர் கடன்:

எவ்வித பிணயமும் இன்றி வங்கிகள் தரக்கூடிய கடன் தான் தனிநபர் கடன். மற்ற கடன்களை விடவும் தனிநபர் கடன் வெகு விரைவிலேயே கிடைத்து விடும். ஏனெனில் இதில் வட்டி விகிதம் அதிகம் என்பதால் வங்கிகளுக்குத் தான் இலாபம் அதிகமாக இருக்கும். வங்கியில் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து, நீங்கள் விரும்பிய இடத்தில் உடனடியாக கார் வாங்க தனிநபர் கடன் உதவுகிறது. வாகன நிறுவனங்களில் கார் வாங்க குறிப்பிட்ட காலத்திற்கு ஏதேனும் தள்ளுபடி இருந்தால் அந்த நேரத்தில் விரைவாக கிடைக்கும் தனிநபர் கடன் உங்களுக்கு உதவும். இதில் மாதத் தவணை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தங்கக் கடன்: ஒரு விரிவான கண்ணோட்டம்! 
Car Loan

வாகன கடன்:

வாகன கடனில் நீங்கள் வாங்க இருக்கும் வாகனம் தான் பிணயமாக கருதப்படும். வாகன கடன் விண்ணப்பித்த உடனே கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. வாகன நிறுவனங்களுக்கு முன்கூட்டியே சென்று வாங்க இருக்கும் காரின் விலை குறித்த பட்டியலை வாங்கி, வங்கியில் கொடுக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு ஆவண சரிபார்ப்புகளுக்குப் பிறகு தான் கடன் கிடைக்கும். கடன் கிடைக்க கால தாமதம் ஆனாலும் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். அதோடு மாதத் தவணையும் குறைவாக இருக்கும்.

கார் வாங்க தனிநபர் மற்றும் வாகன கடன் ஆகிய இரண்டு விதமான கடன்களிலுமே சாதகங்களும் உள்ளன; பாதகங்களும் உள்ளன. ஆகையால் உங்களின் பொருளாதாரத் தேவையைக் கணக்கில் கொண்டு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. இருப்பினும் முன்கூட்டியே திட்டமிட்டு வாகன கடனுக்கு விண்ணப்பித்து கார் வாங்குவது சிறப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com