நீண்ட விடுமுறை நாட்களில் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் ஏன் சிரமமாக உள்ளது தெரியுமா?

ATM
ATM

பொதுவாக வங்கிகளின் தானியங்கி பணப் பொறிகள் (Automatic teller machine) தினமும் ஒருமுறை நிரப்பப்படுகிறது. ஞாயிறு மட்டும் விதிவிலக்கு. எனவே, பெரிய வங்கிகளில் மாதம் 25 நாட்கள் பணம் நிரப்பப்படுகிறது. சிறிய வங்கிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை பணம் நிரப்பப்படுகிறது.

ஒரு ஏடிஎம் மிஷினில் 8 முதல் 15 இலட்சம் வரை பணம் இருக்கும். பணத்தை நிரப்புவதற்கு, வங்கிகள் இதற்கென தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. சில பொதுத்துறை வங்கிகள் தாங்களாகவும், தனியார் நிறுவனங்களுடனும் சேர்ந்தும், பணத்தை நிரப்புகின்றன.

ஆனால்,தொடர் விடுமுறை நாட்களில் பணம் எடுப்பது கடினமாக இருப்பதற்கான காரணம், ஏடிஎம் மிஷினில் உள்ள பணம் சீக்கிரம் தீர்ந்து விடுவதுதான். அதற்கு சில காரணங்கள் உள்ளன. 

  • தொடர் விடுமுறை நாட்கள் பொதுவாக பண்டிகைக் காலமாக இருக்கும். அப்போது, மக்களுக்கு பணத்தேவை அதிகமாக இருப்பதனால், மக்கள் அதிக அளவில் பணம் எடுப்பார்கள். இதனால், பணம் நிரப்பும் நிறுவனம் ஒரு நாளைக்கே சில முறைகள் மறுபடி மறுபடி பணத்தை நிரப்ப நேரிடுகிறது. பணம் தீர்ந்துவிட்டால், நிறுவனம் பணத்தை நிரப்ப குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரமாகும்.

  • திருட்டைத் தவிர்க்க, நகரங்களில் இரவு 9 மணிக்கு மேல், பணத்தை நிரப்ப அனுமதி கிடையாது. கிராமங்களில், மாலை 6 மணிக்கு மேல், அனுமதி கிடையாது. இதன் காரணமாக, பணம் தீர்ந்தவுடன், பணம் உடனே நிரப்பப்படுவதில் சில பிரச்சனைகள் உள்ளன.

  • வங்கிகளின் தானியங்கி பணப் பொறிகள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே உள்ள ஏடிஎம் மையங்களில், கூட்டம் அதிகமாக உள்ளது.

  • பணம் நிரப்பும் நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர் விடுமுறை நாட்களில், விடுப்பில் செல்கின்றனர். ஆட்கள் தட்டுப்பாடு உள்ளது.

அடுத்தபடியாக தொடர் விடுமுறை நாட்களில் தானியங்கி பணப்பொறியில் பணம் முதலீடு செய்வது கடினமாக உள்ளதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். 

  • தொடர் விடுமுறை நாட்களில் மக்களின் தானியங்கி பணப்பொறியின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், தானியங்கி பணப்பொறியின் பின்னால் செயல்படும் கணினி வலையின்( computer network) பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால், தானியங்கி பணப்பொறியினால், பணப் பரிவர்த்தனை சார்ந்து வங்கியைத் தொடர்பு கொள்வது கடினமாக உள்ளது. பணப் பரிவர்த்தனைகள் மெதுவாக நடக்கின்றன. இது எவ்வாறெனில், தீபாவளி, பொங்கல் சமயங்களில் பலர் ஒரே நாளில், ஊருக்கு சாலையில் பயணப்படுவது போல். சாலையில் திடீரென நெரிசல் ஏற்படுவதால், வாகனங்களின் பயணம் மெதுவாகிறது.

இதையும் படியுங்கள்:
Max Alexander: 7 வயதிலேயே பிரபல ஆடை வடிமைப்பாளரான சிறுவன்!
ATM

எனவே, நாம் நமது பணத்தேவையை முன்கூட்டியே கணித்து, ஏடிஎம் மிஷினில் முன்கூட்டியே பணத்தை எடுத்தல், போடுதல் போன்றவற்றைச் செய்தால், இத்தகைய நீண்ட விடுமுறை நாட்கள் சார்ந்த தானியங்கி பணப்பொறிப் பிரச்சனைகளைத்  தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com