இன்றைய காலகட்டத்தில் கார்கள் என்பது அத்தியாவசிய பொருளில் ஒன்றாகிவிட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட டாடா, மஹிந்திரா போன்று நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் யாருக்காவது சொந்தமாக ஒரு காரை தயாரித்து, அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆர்வம் இருக்கலாம். அதை எப்படி செயல்படுத்தலாம் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்:
1. ஒரு தொலைநோக்குப் பார்வை:
நீங்கள் நினைத்தால் ஒரு என்ஜின் மற்றும் நான்கு சக்கரங்களை மாற்றி, ஒரு வண்டியை உருவாக்கி விடலாம். ஆனால், அது பத்தாது. உங்களின் தனித்துவமான விற்பனை முன்மொழிவு Unique Selling Proposition (USP) என்ன? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் கார்களை ஏற்கனவே உள்ள பிராண்டுகளில் இருந்து வேறுபடுத்துவது எது? இது அதிநவீன தொழில்நுட்பமா? நிலைத்தன்மையா அல்லது ஆடம்பரத்திற்காக கார்களை தயாரிக்கப் போகிறீர்களா? என்பதற்கெல்லாம் முதலில் விடையைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
வாகனத் துறையில் சந்தை ஆராய்ச்சியில் ஆழமாக மூழ்குங்கள். நுகர்வோர் விருப்பத் தேர்வுகள்(Understand consumer preferences), சந்தைப் போக்குகள்(market trends) மற்றும் பலர் எதிர்பார்ப்புகளை நிரப்பப்படக் காத்திருக்கும் இடைவெளிகளை(gaps waiting to be filled) புரிந்து வைத்துக்கொள்வது முக்கியம். எதை முக்கியத்துவப்படுத்தி இந்தச் சமுதாயத்துக்கு கார்களை தர நினைக்கிறீர்கள் என்பதை அடையாளம் காணுங்கள். குறிப்பாக மின்சார வாகனங்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் அல்லது கரடுமுரடான எஸ்யூவிகள் என எதுவாக இருந்தாலும் உங்கள் முக்கியத்துவம் எதை நோக்கி உள்ளது என்பதை மக்களுக்கு எளிதில் புரியும்படி இருக்கவேண்டும்.
2. நிர்வாகத் திறமைக்கான புளூபிரிண்ட்:
உங்கள் பிராண்டின் நோக்கம், இலக்குகள் மற்றும் உத்திகள் பற்றிய சுருக்கமான கண்ணோட்டம் உங்கள் நினைவில் என்றைக்கும் மாறாமல் இருக்க வேண்டும். சந்தை பகுப்பாய்வு(Market analysis) செய்து போட்டியாளர்கள், சாத்தியமான வாடிக்கையாளர்கள் மற்றும் எந்தப் பாதையில் நாம் வளர்ச்சியைக் காணலாம் போன்ற சந்தைக் கணிப்புகளை ஆரம்பம் முதல் தொடர்ந்து பகுப்பாய்வு(Analysis) செய்துகொண்டே இருங்கள்.
உங்கள் கார் மாடல்கள், அம்சங்கள் மற்றும் புதுமைகளைத் தொடர்ந்து புதுப்பித்துகொண்டிருக்க வேண்டும். சந்தைப்படுத்துதல், விற்பனைகள் எப்படி போகின்றது? நீங்கள் எதிர்பார்த்த அளவில் உங்கள் தயாரிப்புகள் பார்வையாளர்களைச் சென்றடைகின்றதா? உங்கள் கார் பிரண்டை மக்களிடம் கொண்டு செல்லும் டீலர்ஷிப் நெட்வொர்க்குகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதையெல்லாம் உன்னிப்பாக கவனிப்பது மிகவும் அவசியம்.
3. உங்கள் கனவு காண எரிபொருள்:
மூலதன முதலீடு (Capital investment): நிதி திரட்டுவது உங்கள் கார் ஓடத் தேவைப்படும் எரிபொருள் போன்றது. எனவே, அதற்கான முதலீட்டாளர்கள், நம்பகமான துணிகர மூலதனம்(venture capital) மற்றும் நீங்கள் எங்கிருந்து கடன்களை பெறப் போகிறீர்கள் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். காரணம் தயாரிப்புக்கு முந்தைய R&D செலவுகளே அதிகமாக இருக்கும் என்பதை நினைவில்கொள்ளவும்.
LLC, கார்ப்பரேஷன் அல்லது பார்ட்னர்ஷிப் போன்ற சரியான வணிக நிறுவனத்தைத் தேர்வு செய்ய சட்ட வல்லுனர்களை அணுகுங்கள். உங்கள் பிராண்டைப் பதிவு செய்து தேவையான உரிமங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
4. டிசைன் ஸ்டுடியோ - உங்கள் கார் டிஎன்ஏவை உருவாக்குதல்:
வடிவமைப்பு குழு: ஆர்வமுள்ள வடிவமைப்பாளர்களின் குழுவைக் உருவாக்கி, உங்கள் காரின் அழகியலை ஸ்கெட்ச், மாடல், ஏரோடைனமிக்ஸ்(Aerodynamics), பாதுகாப்பு மற்றும் பணிச்சூழலியல்(ergonomics) ஆகியவற்றை கவனியுங்கள்.
முன்மாதிரி(Prototyping): செயல்பாடு மற்றும் அழகியலை(aesthetics) சோதிக்க சில முன்மாதிரிகளை உருவாக்கி, பல கட்ட சோதனைகளைச் செய்யவேண்டும்.
5. தொழிற்சாலையை உருவாக்குதல்:
இடம்: உங்கள் உற்பத்தி வசதிக்குப் பொருத்தமான தளத்தைத் தேர்வு செய்யவும். அந்த இடம் சப்ளையர்கள் மற்றும் சந்தைகளுக்கு அருகாமையில் இருப்பது முக்கியம்.
சப்ளை செயின்: என்ஜின்கள், சேஸ்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற உதிரிபாகங்களுக்கான சப்ளையர்களுடன் உறவுகளை உருவாக்குங்கள்.
தரக் கட்டுப்பாடு: உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான தரச் சோதனைகளைச் செயல்படுத்த வேண்டும்.
6. சந்தைப்படுத்தல் முடுக்கம்(Marketing Acceleration):
பிராண்டிங்: உங்கள் லோகோ, அதற்கான அர்த்தம் மற்றும் உங்கள் பிராண்ட் உருவான கதை ஆகியவை உங்கள் தயாரிப்புகளை வாங்குபவர்களுடன் உண்டாகும் உணர்ச்சிபூர்வமான தொடர்புகள் போன்றவை.
விளம்பரம்: டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் காரின் அம்சங்களையும் நன்மைகளையும் காட்சிப்படுத்தி மக்களிடம் உங்கள் காரை வாங்கும் ஆசையைத் தூண்டுங்கள்.
7. தேவையான ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுங்கள்:
பாதுகாப்பு மற்றும் உமிழ்வுகள்(Safety and Emissions): பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் உமிழ்வு(Emisions) விதிமுறைகளுக்கு இணங்கும்படி உங்கள் தயாரிப்புகளை வைத்துக்கொள்ளுங்கள்.
அறிவுசார் சொத்து(Get a pattern rights): உங்கள் வடிவமைப்புகள், மற்றும் புதுமைகளைப் பாதுகாக்கவும்.