இன்னும் ஏன் கடன் வாங்குறீங்க? அவசரகாலத்துல கடனில்லாம வாழ 20 மாற்று வழிகள் இதோ!

emergency money tips
emergency money tips
Published on

ங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. அப்போது, உங்களிடம் குறைந்தபட்சம் 3 மாதம் முதல் 6 மாதத்திற்கான செலவுக்கான பணத்தை அவசர கால நிதியாக வைத்திருந்தால், கடன் வாங்காமல் அவசர கால நிதி கொண்டே, அவசரப் பணத் தேவையை சமாளிக்க முடியும். ஆனால், அவ்வாறு அவசர கால நிதி இல்லையென்றால், அவசர காலத் தேவைகளை (emergency money tips) கடனின்றி சமாளிக்க 20 வழிகள்.

1. வீட்டிலுள்ள அத்தியாவசிய பொருட்களைத் தவிர மற்ற பொருட்களை விற்று பணம் ஈட்டப் பாருங்கள்.

2. அலுவலகத்தில் அடுத்த மாதத்திற்கான சம்பளத்தை இப்போதே பெறும் திட்டத்தைப் (salary advance) பயன்படுத்த முயலுங்கள். 

3. முதலீடுகளை முன்கூட்டியே நிறுத்தி பணமாக மாற்றப் பாருங்கள். உதாரணமாக, உங்களது வைப்பு நிதியினை நடுவில் எடுக்கலாம். அபராதம் இருந்தாலும் பரவாயில்லை.

4. வீட்டின் நிதி திட்டமிடலில் (Budget) உடனடியாக மாற்றம் செய்யுங்கள். பணத்தை சேமிக்கப் பாருங்கள். உதாரணமாக, மாதாந்திர சந்தாக்களை நிறுத்தலாம்.

5. உங்களுக்கு ஏற்கனவே, ஏதாவது கடன் இருப்பின், அந்த கடனை கொஞ்சம் தாமதமாக செலுத்தக் கேட்டுப் பாருங்கள் (deferring payment). இதன் மூலம், அந்தக் கடன் தவணைப் பணம் மிச்சமாகும். 

6. தங்கம், தேசிய சேமிப்பு பத்திரம் போன்ற முதலீடுகளை விற்று பணம் பெறப் பாருங்கள். 

7. வீட்டின் வாகனத்தை விற்று விட்டு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
திட்டமிடுதலின் அவசியம்; மன்னனின் சாமர்த்தியம்!
emergency money tips

8. வாடகை வீடு எனில், வீட்டு உரிமையாளரிடம் வாடகைப் பணத்தில் குறைவாக செலுத்த அனுமதி கேளுங்கள். அதை உங்களது முன்பணத்தில் (advance) கழித்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்.

9. உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருந்தால், அது சார்ந்த வேலையில் பகுதி நேரத்தில் ஈடுபடுங்கள். உதாரணமாக, சிற்றுந்து ஓட்டத் தெரிந்தால், சிற்றுந்து நிறுவனத்தில் வேலைக்கு சேர்வது.

10. உங்களின் சேம நல நிதி, பொது சேம நல நிதி போன்ற ஓய்வு காலத் திட்டங்களில் பணத்தை முன்கூட்டியே, பகுதி பணத்தைப் (partial withdrawal) பெறப் பாருங்கள்.

11. வீட்டில் வாடகை விடுவதற்கு இடமிருப்பின், வாடகைக்கு விட்டு, பணத்தைப் பெறலாம்.

12. பெரிய வாடகை வீட்டில் குடியிருந்தால், மற்றொரு சிறிய வாடகை வீட்டிற்கு மாறிக் கொள்ளலாம். வாடகைப் பணம் மிச்சமாகும்.

13. குழந்தைகளின் பள்ளி தவிர எந்த ஒரு அதிகப்படியான பயிற்சி வகுப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தலாம்.

14. திருமணமானவர் என்றால், மனைவியும் வேலைக்குச் செல்லப் பார்க்கலாம்.

15. உங்களது தந்தை, சகோதரர், நெருங்கிய நண்பர்கள் போன்றவர்களிடம் பணம் கேட்கலாம்.

16. ஏற்கனவே கடன் இருந்தால், அவற்றை ஒன்று படித்தி (debt consolidation), கடன் தவணைத் தொகையினை குறைக்கலாம். இதன் மூலம், கடன் தவணைப் பணம் மிச்சமாகும்.

17. முதலீடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். முதலீட்டுத் தொகையினை அவசரத் தேவைக்கு ஒதுக்கலாம்.

18. அலுவலகத்தில் பதவி உயர்வு கேட்கலாம். அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு.

19. தேவைப்பட்டால் வேலை மாறலாம். அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு.

இதையும் படியுங்கள்:
Emergency Funds: அவசரகால நிதியின் முக்கியத்துவங்கள்!
emergency money tips

20. அடிப்படை சேமிப்பு கணக்கிற்கு மாறலாம். பணத்தினை குறைத்து விடலாம். அதில் 0 ரூபாயினை கூட வைத்திருக்க முடியும். கடனின்றி இருப்பதே முக்கியம்.

அவசர கால நிதி (emergency money tips) நெருக்கடியிலிருந்து மீண்ட பின்னர், அடுத்த வேலை, அவசர கால நிதியைத் தயார் செய்து, அதன் மூலம், அவசர காலத் தேவைகளை எளிதில் கையாளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com