இந்தியாவில் விலை உயர்ந்த சாக்லேட் இறக்குமதி அதிகரிப்பு!

Expensive chocolate.
Expensive chocolate.
Published on

இந்தியாவில் கிறிஸ்மஸ், நியூ இயர் பண்டிகைகளை முன்னிட்டு விலை உயர்ந்த சாக்லேட் ரகங்கள் இறக்குமதி அதிகரித்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் அதிவிரைவாக விரிவடைந்து வரும் பொருளாதார நடவடிக்கை உணவு பொருள் சந்தையே இருக்கிறது. வளரும் நாடுகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் தங்கள் வருமானத்தில் பாதிக்கும் மேல் சேமிப்பதற்காக முன்னுரிமை தருவார்கள் ஆனால் தற்போது அது குறைந்து இருக்கிறது. மேலும் அன்றாட நடவடிக்கைகளை பயனுள்ளதாக கழிக்கவும், பொழுதுபோக்கவும், இதை காட்டிலும் உணவுப் பொருட்களுக்கும் அதிகம் செலவு செய்ய தொடங்கி இருக்கின்றனர்.

இதனால் உணவு பொருள் மீதான சந்தை, தொடர் உயர்வை சந்தித்து இருக்கிறது. இதில் ஒரு பகுதியாக சாக்லேட் மீதான வர்த்தக நடவடிக்கையும் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் உயர தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பணக்கார நாடுகளில் ஆடம்பர, விலை உயர்ந்த சாக்லேட்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த போக்கு வளரும் நாடுகளிலும் தற்போது உயரத் தொடங்கி இருக்கிறது. இதில் ஒரு பகுதியாக இந்தியா ஆடம்பரம் மற்றும் விலை உயர்ந்த சாக்லேட்களை அதிகம் இறக்குமதி செய்ய தொடங்கி இருக்கிறது.

2022 - 2023 ஆண்டில் 231 கோடி ரூபாய் அளவிற்கு உயர்தர, ஆடம்பர, பிரிமியம் சாக்லேட்டுகளை இந்தியா இறக்குமதி செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டு அதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது 45 சதவீத அளவிற்கு உயர்ந்திருப்பதை காட்டுகிறது. அதிலும் குறிப்பாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் அதைத் தொடர்ந்து நியூ இயர் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் தற்போது ஆடம்பர சாக்கடை தேவை இந்தியாவில் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதற்காக நவம்பர் மாதத்தில் இறுதியில் இருந்து 40 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உயர்தர சாக்லேட் இறக்குமதி நடைபெற்று இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
Expensive chocolate.

உயர்தர சாக்லேட்டுகளில் ஆர்கானிக், சுகர் ஃப்ரீ சாக்லேட், விகான், டார்க் போன்ற ரகங்கள் அதிக விற்பனையாகும் ரகங்களாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com