உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் நிதிக் கவலைகள் - மீண்டு வர என்ன செய்யலாம்?

Financial worries
Financial worries
Published on

நமது சம்பளம் எங்கு தான் செல்கிறது? எப்படி இவ்வளவு விரைவாக காலியாகி விடுகிறது? இந்தச் சம்பளம் பற்றாக்குறையாக இருக்கிறதே! அதிக சம்பளம் வாங்க முயற்சிக்க வேண்டும் என பலரும் நிதிக் கவலையை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிதிக் கவலைகளுக்கான காரணங்கள் என்ன மற்றும் அதனைத் தீர்ப்பது எப்படி என இப்போது காண்போம்.

நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு செல்லவும் பணம் இன்றியமையாதது. பணத்தை சம்பாதிக்க அனைவரும் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர். மாதம் முழுக்க உழைத்துக் கிடைக்கும் சம்பளம், பலருக்கும் ஒரிரு நாட்களில் தீர்ந்து விடுகிறது. எப்படி தான் செலவாகிறது என்றே பலருக்கும் குழப்பமாக இருக்கும். அத்தியாவசியத் தேவைகள், இஎம்ஐ, திடீர் செலவுகள் மற்றும் அவசரத் தேவைகள் என சம்பளப் பணம் வெகு விரைவிலேயே காலியாகிறது. இதனால் அடுத்து வரும் நிதித் தேவைகளைச் சமாளிக்க பலரும் கடன் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சமூக அந்தஸ்து:

நாம் வாங்கும் சம்பளத்தை திறமையாக கையாள்வதும் ஒரு கலை என்றே சொல்லலாம். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு அவர்களைப் போல் நாமும் செலவு செய்தால், பிறகு கடன் சுமையில் மாட்டி நிம்மதியை இழக்க நேரிடும். சிக்கனமாக செலவு செய்தால், அதனைக் கஞ்சத்தனம் என்று சொல்பவர்களை நாம் எப்போதும் கண்டு கொள்ளக் கூடாது. நிதிப் பிரச்சினையில் சிக்கித் தவிப்பதை விடவும், கஞ்சத்தனம் என்ற பெயரை தாராளமாக பெற்றுக் கொள்ளலாம். சமூகத்தில் நல்ல அந்தஸ்து வேண்டும் என நினைத்து பலரும் வீண் செலவுகளைச் செய்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.

கடன் அதிகரிப்பு:

இன்றைய பொருளாதார உலகில் தனிநபர் கடன் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடனில்லாதவரைக் கூட கிரெடிட் கார்டுகள் கடனாளியாக மாற்றி விடுகிறது. இந்த கடன் சுமையால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தங்கள் நிம்மதியை இழக்கின்றனர். மேலும், கடனை அடைக்க வழி தெரியாமல் விபரீத முடிவுகளை எடுப்பது கொடுமையின் உச்சமாக கருதப்படுகிறது.

வேலையிழப்பு:

திடீரென ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டால், அடுத்தடுத்து வரப்போகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பதை நினைத்தே கவலையில் ஆழ்ந்து விடுவர். ஆகையால், உங்கள் வேலைக்கு சம்பந்தப்பட்ட மேலும் சில திறன்களை வளர்த்துக் கொள்வது நல்லது. திடீர் வேலையிழப்புகளின் போது, இந்தத் திறமைகள் உங்களுக்கு விரைவில் மாற்று வேலையைப் பெற உதவும்.

இதையும் படியுங்கள்:
வேலையிழப்பு காலத்தில் நிதிச்சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி தெரியுமா?
Financial worries

பண இருப்பு:

கையில் பண இருப்பு இல்லாத நிலையை இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்கின்றனர். இம்மாதிரியான நேரங்களில் நிதி நெருக்கடியின் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். இதனைச் சமாளிக்க தவறான வழிகளை தேர்ந்தெடுப்பதற்கும் வாய்ப்புண்டு. ஆகையால் எதையும் மறைக்காமல் குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இது நமது மனக்கவலையை பாதியாக குறைத்து விடும்.

வீண் செலவுகளைக் கண்டறிந்து அவற்றை குறைத்திட முயல வேண்டும். தேவைப்பட்டால் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி நடக்கலாம். மாதந்தோறும் பட்ஜெட்டை வகுத்து, அதன்படி செலவு செய்து வந்தால் நிதிநிலையை மேம்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com