லைசென்ஸ் வேண்டாம்... 90 கி.மீ மைலேஜ்! இந்தியாவில் களமிறங்கிய 'Firefox Urban Eco' மின்சார சைக்கிள்!

சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஃபயர்பாக்ஸ், தற்போது 'Firefox Urban Eco' என்ற மின்சார சைக்கிளை (Electric Cycle) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
Firefox Urban Eco Electric Cycle - மின்சார சைக்கிள்
Firefox Urban Eco Electric Cycle - மின்சார சைக்கிள்image credit-zigwheels.com
Updated on

ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி இயக்கும் வசதியுடன் 'Firefox Urban Eco' மின்சார சைக்கிள் (Electric Cycle) இந்திய சந்தையில் ரூ.93,035 விலையில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு, குறைவான பராமரிப்புச் செலவு மற்றும் அரசின் மானியங்கள் போன்ற காரணங்களால் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கார், ஸ்கூட்டர் மற்றும் பைக் என அனைத்து வாகனங்களிலும் மின்சார வாகனங்களின் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்தான் தற்போது இந்தியாவில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு போட்டியாக மிதிவண்டி எனப்படும் சைக்கிள்களிலும் மின்சார வேரியண்ட் ஆதிக்கம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மின்சார சைக்கிள்கள் நகர்ப்புற போக்குவரத்தின் எதிர்காலம் என்றே சொல்லலாம்.

இந்தியாவில் மின்சார சைக்கிள்கள் (Electric Bicycles) ஹீரோ லெக்ட்ரோ (Hero Lectro), இ-மோட்டோரெட் (EMotorad), மற்றும் ஸ்டிரைடர் (Stryder) போன்ற முன்னணி நிறுவனங்களால் பல்வேறு புதிய வேரியண்டுகளாக அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. அந்த வகையில் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஃபயர்பாக்ஸ், தற்போது 'Firefox Urban Eco' என்ற மின்சார சைக்கிளை (Electric Cycle) இந்திய சந்தையில் ரூ. 93,035 விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியாவின் முதல் ஆப்-கட்டுப்பாட்டு பிரீமியம் மின்சார சைக்கிளாகும். இந்திய சந்தையில் Firefox Urban Eco இ சைக்கிள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் அன்றாடப் பயணத்தை எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மேற்கொள்ள இந்த மின்சார சைக்கிள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இந்த மின்சார சைக்கிளை ஓட்டலாம் என்பதால் மக்களிடையே இந்த சைக்கிளை வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

Firefox Urban Eco Electric Cycle|மின்சார சைக்கிள்
Firefox Urban Eco Electric Cycle|மின்சார சைக்கிள்image credit-zigwheels.com

இ ஸ்கூட்டர்களில் இருப்பதுபோல சார்ஜ் செய்து கொண்டு ஓட்டும் வகையில் இந்த மின்சார சைக்கிள்கள் சந்தையில் அறிமுகமாகி வருகிறது.

பெடரல் அசிஸ்ட் (Pedelec) முறையில் முழு சார்ஜில் 90 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் சக்திவாய்ந்த 36V, 10Ah திறன்கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 90 கிமீ வரை பயணிக்கும் ஆற்றலையும், மணிக்கு 25 கி. மீ வேகத்தையும் வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மிரட்டலான வசதிகளுடன் களமிறங்கிய புதிய 'வைபர்' மின்சார சைக்கிள்!
Firefox Urban Eco Electric Cycle - மின்சார சைக்கிள்

10Ah திறன் கொண்ட பேட்டரியை, முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 5 மணிநேரம் ஆகும். இதில் ட்யூப் சக்கரங்கள், ஸ்பியர் கியர் அமைப்பு மற்றும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

இது ஒரே ஒரு வேரியண்ட் மற்றும் ஒரே ஒரு வண்ணத்தில் கிடைக்கிறது. 19 கிலோ எடை கொண்ட இந்த மின்சார சைக்கிளில் பின்புற ஹப் மோட்டார், எல்இடி விளக்குகள், ஷிமானோ 7-ஸ்பீடு கியர்கள் மற்றும் 5 நிலை பெடல் அசிஸ்ட் அமைப்பு உள்ளது.

இதில் பயன்பாட்டுக்கு ஏற்ற கைப்பிடிகள் பொருத்தப்பட்ட தட்டையான ஹேண்டில்பார்கள், ஒரு ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் மற்றும் ஒரே ஒரு பவர் பட்டன் ஆகியவை உள்ளன. இந்த மின்சார மிதிவண்டியை ஃபயர்பாக்ஸ் ஃபிட் (Firefox Fit) செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
இந்த மின்சார வாகனம் வித்தியாசமானது!
Firefox Urban Eco Electric Cycle - மின்சார சைக்கிள்

மிகவும் குறுகலான நெருக்கடியான இடங்களில் ஓட்டிச்செல்வதற்கும், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சென்னை போன்ற நகரங்களில் ஓட்டி செல்வதற்கும் இந்த ஃபயர்பாக்ஸ் ஃபிட் மின்சார சைக்கிள் சிறந்த தேர்வாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com