

இ-மோட்டாராட் (EMotorad) என்பது 2020ல் தொடங்கப்பட்ட புனேவைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி மின்சார சைக்கிள் (e-cycle) பிராண்ட்டாகும். இது மலிவு விலை, பிரீமியம் அம்சங்கள், நீண்ட தூர ரேஞ்ச் (70 கிமீ வரை) மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றது. அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் 500+ ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் இவர்களின் பைக்குகள், தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை.
இந்த நிறுவனத்தின் வைபர் (Viper), ரேஞ்சர் (Ranger), எக்ஸ்1 (X1), மற்றும் டோப் (Dope) போன்றவை பிரபலமான மாடல்கள். அளவில் பார்க்க சிறியதாக இருப்பினும், 110 கிலோ வரை எடை தாங்கும் திறன், பெண்களும் எளிதாக ஓட்டக்கூடிய ஸ்டெப்-த்ரூ (Step-through) வடிவமைப்பு, மற்றும் 4-5 மணிநேர சார்ஜிங் நேரம் போன்ற காரணங்களுக்கான இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்கள் அனைவரின் விருப்ப தேர்வாக உள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் (Make in India) தரம், இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் சைக்கிள் பிராண்ட், உதிரிபாகங்கள் எளிதாகக் கிடைக்கும் போன்ற காரணங்களால் மக்கள் இதை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இ-மோட்டாராட் நிறுவனத்தில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பல்வேறு விதமான எலெக்ட்ரிக் சைக்கிள்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்துவரும் இ-மோட்டாராட் நிறுவனம், வளர்ந்து வரும் தனிநபர் மின்சார வாகனப் பிரிவில் தனது இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில், புதியதாக 'வைபர்' (Viper) என்ற புதிய மின்சார சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இது 110 கிலோ வரையில் எடை கொண்ட சுமைகளை சுமக்க கூடியது ஆகும்.
முக்கிய சிறப்பம்சமாக என்ஜினீயரிங்கில் மோட்டோ-ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் சைக்கிள், அன்றாட பயன்பாட்டிற்கு வசதியாக உபயோகப்படுத்தும் வகையில் புதிய இ-மோட்டாராட் வைபரில் 48 வோல்ட் 250 வாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் வழங்கப் பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 70 கிமீ-க்கு பெடலை உபயோகிக்காமல் பயணிக்கலாம் என்றும் இடையிடையே பெடலையும் பயன்படுத்தினால் அதிகப்பட்சமாக 85கிமீ தொலைவு வரையில் பயணிக்கலாம் என்றும் இ-மோட்டாராட் நிறுவனம் உத்திரவாதம் அளித்துள்ளது.
இந்த மோட்டர் சைக்கிளின் முன் மற்றும் பின் சஸ்பென்ஷன், ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 20-இன்ச் x 4-இன்ச் அகலமான நைலான் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் இளைஞர்கள் நகர்ப்புற சாலைகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பிலும் ஓட்டும் வகையில் நேர்த்தியாக இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப் பட்டுள்ளது.
வைப்பர் மாடலில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று, NFC அடிப்படையிலான திறக்கும் அமைப்பு ஆகும். இது, பயனர்கள் சாவி இல்லாமலேயே வாகனத்தை இயக்க முடியும். மேலும், இந்த மாடலில் டிஜிட்டல் திரை, பலவிதமான பெடல்-அசிஸ்ட் முறைகள், எலெக்ட்ரிக் சைக்கிளின் முன்பக்கத்தில் டி.ஆர்.எல் உடன் 420 லக்ஸ் விளக்கும், பின்பக்கத்தில் ஹார்ன் உடன் விளக்கு, ஷிமனோ 7-ஸ்பீடு டிரைவ்ட்ரெயின் மற்றும் என்.எஃப்.சி அன்லாக் வசதி உடன் ஹேண்டில்பாருக்கு மத்தியில் சி9 டிஸ்பிளே போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களில் புதிய வைபர் எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.66,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிவு அல்லது உரிமம் தேவையில்லாத, இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் வேளையில் இ-மோட்டாராட் நிறுவனத்தால் வைப்பர் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டி நிறைந்த இந்தச் சந்தையில், தொழில்துறை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, அதிகத்திறன் கொண்ட பேட்டரிகள் போன்ற அம்சங்களைச் சேர்த்து வருகின்றன.