
*உலகிலேயே ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் வேலை பார்ப்பவர்கள் இத்தாலி நாட்டினர் தான். அவர்கள் குறைந்தபட்சம் 12 வருடங்களாவது தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பார்கள். அந்தளவிற்கு அவர்களுக்கு சலுகைகள் உண்டு.
*சுவீடன் நாட்டில் ஒரு வேலையில் இருந்து கொண்டே பிஸினஸ் ஆரம்பிக்கலாம். அதற்கு அந்த நாட்டின் அரசு 6 மாதம் சம்பளம் இல்லாமல் விடுமுறையும் தருகிறது. 6 மாதங்களில் பிஸினஸ் நன்றாக நடந்தால் அதையே தொடரலாம்; இல்லையேல் திரும்ப பழைய வேலைக்கே திரும்பி விடலாம் . எந்த சம்பளமும் குறையாது, சலுகைகளும் குறையாது. சுவீடன் நாட்டில் குழந்தை பிறந்ததிலிருந்து அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு வேலை பார்க்கும் பெற்றோர் இருவருக்குமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.
*ஜப்பான் நாட்டில் எந்த நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் சரி, வேலை தொடங்கும் முன் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். ஜப்பானில் ஒரு வித்தியாசமான வழக்கம் நடைமுறையில் உள்ளது. வேலைக்கு செல்லும் ஆண்கள் தங்களது முழு சம்பளத்தையும் வாங்கி மனைவியிடம் கொடுத்து விடுவார்கள். அவர்கள் அதில் ஒரு சிறு தொகையை கணவர்களுக்கு பாக்கெட் மணியாக கொடுத்து விடுகிறார்கள். அதில்தான் அவர்கள் தங்களது செலவுகளை பார்த்துக் கொள்வார்கள்.
*பிரான்ஸ் நாட்டில் வேலை நேரத்திற்கு பிறகு வேலை பார்க்கும் நிறுவனங்களில் இருந்து வரும் ஒரு மின்னஞ்சலுக்கு கூட யாரும் பதிலளிக்க மாட்டார்கள். வேலை நேரத்தில் மட்டுமே வேலை என்பது அங்கு நடைமுறை.
*இஸ்ரேல் நாட்டில் அலுவலகங்கள் ஞாயிறு முதல் வியாழன் வரை மட்டுமே இயங்குகிறது. யூதர்களின் புனித நாளான வெள்ளிக்கிழமை அங்கு விடுமுறை. வாரத்தில் 43 மணி நேரம் வேலை பார்த்ததால் போதும். இஸ்ரேல் நாட்டில் வேலை பார்ப்பவர்கள் ஓய்வு பெறும் வயது 67. அதில் ஒரு குழந்தையை இழந்தவர்கள் 71 வயது வரை பணியாற்றலாம். இஸ்ரேலிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் போதோ அல்லது பயங்கரவாத தாக்குதலிலோ பிள்ளையை இழந்தவர்கள் கட்டாய ஓய்வு வயதுக்கு பிறகும் 5 ஆண்டுகளுக்கு பணியாற்றலாம்.
*உலகிலேயே வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக திகழ்வது டென்மார்க் நாடுதான். அங்கு வேலை பார்க்கிறவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. குழந்தைகள் இலவச கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகள், குறைந்த வீட்டு வாடகை. இதோடு ஒரு வாரத்திற்கு வெறும் 23 மணி நேரங்கள் வேலை பார்த்தால் போதும்..
*வேலை பார்த்து ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியாக வாழ சிறந்த நாடு நார்வே. காரணம் இங்கு சிறந்த மருத்துவ வசதிகள், மரியாதை மற்றும் பண சலுகைகள் அதிகம் கிடைக்கின்றனவாம்.
*அயர்லாந்து நாட்டில் வேலை நேரத்திற்கு பிறகு முதலாளிக்கும் , தொழிலாளிக்கும் எந்த தொடர்பும் கூடாது. மீறினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
*சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவருக்கு வேலை போய்விட்டால் கவலை வேண்டாம். வேலையில் இருந்தபோது கடைசி மூன்று மாதங்களில் நீங்கள் பெற்ற ஊதியத்தின் சராசரித் தொகையில் 70 சதவீதத்தை உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுவிட்சர்லாந்து அரசு வழங்கும். உங்களது மாத ஊதியம் 3,769 ‘ஸ்விஸ் ஃபிராங்க்’ மதிப்பைவிடக் குறைவாக இருந்தாலோ, குழந்தைகள் ஊதியத்தை நம்பி இருந்தாலோ, இது 80 சதவீதமாக அதிகரிக்கும். உங்களுக்கு வேறு வேலை கிடைக்கும் வரை அல்லது இரண்டு வருடங்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.
*ஐக்கிய அரபு நாடுகளில் வேலை நேரத்தில் தொழுகை செய்ய "தொழுகை நேரம்" வழங்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் கணவர், மனைவி இறந்துவிட்டால் சம்பளத்துடன் கூடிய 5 நாள் விடுமுறை விடப்படும். அதேபோல் திருமணத்துக்கும் சம்பளத்துடன் கூடிய 5 நாள் விடுமுறை வழங்கப்படுகிறது.
*வேலை பார்ப்பவர்களுக்கு கை நிறைய சம்பளத்தை அள்ளி வழங்கும் டாப் டென் நாடுகள். 1.சுவிட்சர்லாந்து (இந்திய மதிப்பில் 5 லட்சம்) 2.லக்சம்பர்க் (4.5 லட்சம்) 3. சிங்கப்பூர் (4 லட்சம்) 4. அமெரிக்கா(3.5) 5. ஐஸ்லாந்து 6. கத்தார் 7. டென்மார்க் 8. ஐக்கிய எமிரேட்ஸ் 9. நெதர்லாந்து 10. ஆஸ்திரேலியா.